கம்போடியாவுக்கு சீனா மருத்துவப் பொருட்கள் நன்கொடை
2021-11-24 10:32:59

கம்போடிய தேசியப் பாதுகாப்பு அமைச்சர் பெனாம் பென் சர்வதேச விமான நிலையத்தில் 23ஆம் நாள் மாலை, விழா ஒன்றை நடத்தி, சீன ராணுவ படை நன்கொடையாக வழங்கிய 4ஆவது தொகுதி தொற்று நோய் தடுப்புப் பொருட்களை பெற்றார். இவ்விழாவில் கம்போடியாவுக்கான சீனத் தூதர் வாங் வென்டியன் உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில்,

சீன-கம்போடிய ராணுவப் படைகள் ஒன்றுக்கு ஒன்று உதவி அளித்து, தொற்று நோய் தடுப்புப் பொருட்களை ஒன்றுக்கு ஒன்று நன்கொடையாக வழங்கின. இது சர்வதேச ராணுவ ஒத்துழைப்பின் மாதிரியாக மாறியுள்ளதோடு, சீன-கம்போடிய பொது சமூக ஆக்கப்பணிக்கும் துணை புரியும் என்றார்.