இவ்வாண்டுக்குள் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ள இந்திய சர்வதேச விமானச் சேவை
2021-11-25 10:28:44

இந்திய பயணியர் விமானச் சேவைத் துறையின் அதிகாரி ஒருவர் 24ஆம் நாள் உள்ளூர் விமானத் தொழிலின் வளர்ச்சி பற்றிய கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட போது, இவ்வாண்டு இறுதிக்குள் சர்வதேச வணிக விமானச் சேவை மீண்டும் தொடங்கக் கூடும் என்று தெரிவித்தார். அண்மையில், சர்வதேச பயணியர் போக்குவரத்து சேவையை இயல்பு நிலைக்குக் கொண்டு வர விரும்பும் இந்திய அரசு, இதன் மீட்சிப் போக்கு பற்றி மதிபீடு செய்யத் தொடங்கியுள்ளது.

பயணியர் விமானச் சேவைத் துறையின் அதிகாரி மேலும் கூறுகையில், தற்போது பயணியர் விமானச் சேவை வாரியம் உள்ளநாட்டு விமான நெறியில் சோதனை மேற்கொண்டு, 100 விழுக்காடு பயணிகளுக்கும் உணவு வினியோகத்துக்கும் அனுமதி அளித்துள்ளது என்றும் தெரிவித்தார்.