சீன-ஈரான் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு
2021-11-25 10:51:42

சீன அரசவையின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹோசைன் அமிர்-அப்துல்லாஹியனுடன் நவம்பர் 24ஆம் நாள் காணொளி மூலம் சந்திப்பு நடத்தினார்.

அப்போது வாங்யீ கூறுகையில், இவ்வாண்டு சீன-ஈரான் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவாகும். ஈரானுடன் இணைந்து இரு நாட்டுப் பன்முக ஒத்துழைப்புத் திட்டத்தைச் செவ்வனே செயல்படுத்தி, இரு நாட்டுப் பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவு புதிய சாதனையைப் பெறுவதை முன்னேற்ற சீனா விரும்புவதாக தெரிவிதார்.

அப்துல்லாஹியன் கூறுகையில், ஈரான்-சீன பன்முக ஒத்துழைப்புத் திட்டம், இரு நாட்டுறவு புதிய கட்டத்தில் நுழைவதை முன்னேற்றியுள்ளது. சீனாவுடன் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளை ஆழமாக்க ஈரான் விரும்புகிறது என்றார்.

மேலும், ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை, ஆப்கானிஸ்தான் சூழ்நிலை முதலியவற்றைக் குறித்து இரு தரப்பும் கருத்துக்களைப் பரிமாற்றியுள்ளன.