புது தில்லியில் பள்ளிகள் திறப்பு
2021-11-25 09:52:14

இந்தியாவின் தலைநகர் புது தில்லியில் உள்ள அனைத்து பள்ளிகளும் நவம்பர் 29ஆம் நாள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. அரசு அலுவலகங்கள் அதே நாள் முழுமையாக இயங்கத் தொடங்கும். எனினும் டிசம்பர் 3ஆம் நாள் வரை, மக்களின் அன்றாட வாழ்க்கை பொருட்களை வினியோகிக்கும் வாகனங்களைத் தவிர, பெரிய ரக சரக்குந்துகள் இந்நகருக்குள் நுழைய அனுமதி இல்லை என புது தில்லி நகராட்சி அரசு 24ஆம் நாள் அறிவித்தது.

இந்தியக் காற்று தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆய்வு தரவுகளின் படி, 24ஆம் நாள் புது தில்லியின் காற்று தரம் மிக மோசமான நிலையில் இருந்தது. ஆனால் 22ஆம் நாள் முதல் இந்நகரின் காட்சி தன்மை கடந்த வாரத்தில் இருந்ததை விட சீராகியுள்ளது.

அடுத்த மூன்று நாட்களுக்குள், புது தில்லியின் காற்று தரம் தொடர்ந்து மிக மோசமான நிலையில் இருக்கக் கூடும் என கருதப்படுகிறது.