அமெரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வைரஸ் திரிபு
2021-11-25 09:39:19

அமெரிக்காவிலேயே புதிய ரக கரோனா வைரஸின் இரு வகை திரிபுகள் மீண்டும் இணைந்ததால் உருவான புதிய திரிபை அறிவியளாலர்கள் கண்டறிந்தனர். இந்த புதிய திரிபு வைரஸின் பரிணாமம் மற்றும் தொற்று நோய் பரவலுக்கு உள்ளார்ந்த தாக்கத்தைக் கொண்டு வரவும், இதனால் புதிய வகை சூப்பர் வைரஸ் உருவாகவும் வாய்ப்புண்டு என்று பிரிட்டனின் தி இண்டிபெண்டென்ட்(The Independent) நாளேட்டில் 22ஆம் நாள் தகவல் வெளியிடப்பட்டது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவில் வேறுபட்ட திரிபுகள் பெருமளவில் பரவி வருவதால், எதிர்காலத்தில் அவை இணைந்து புதிய திரிவு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்றும் தெரிகிறது.