"ஜனநாயகத்தை" பயன்படுத்தி பிற நாடுகளை ஆக்கிரமித்த அமெரிக்கா
2021-11-30 10:39:24

இரண்டாவது உலகப் போர் முடிந்ததிலிருந்து, "ஜனநாயகம்" என்ற பதாகையின் கீழ் குழு அரசியலில் அமெரிக்கா ஈடுபட்டு வருகின்றது. "ஜனநாயகத்தை" பரப்புவதன் பெயரில் பிற நாடுகளை அமெரிக்கா ஆக்கிரமித்து அப்பாவி மக்களை கொன்று குவித்துள்ளது. தொடர்புடைய நாடுகள் நீண்டகாலக் கொந்தளிப்பில் சிக்கியுள்ளன.

கடந்த சில ஆண்டுகளில், சீனாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் விதம், அமெரிக்காவின் சில அரசியல்வாதிகள் "ஜனநாயகத்தை" மீண்டும் பயன்படுத்தி, "இந்தோ-பசிபிக் நெடுநோக்கு", அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய முத்தரப்பு பாதுகாப்பு கூட்டாணி ஆகியவற்றை முன்வைத்து, பிரதேசங்களின் அமைதி மற்றும் நிதானத்தின் மிக பெரிய ஆபத்தாக மாறியுள்ளனர்.

அமெரிக்காவின் செயல்கள், தொடர்புடைய நாடுகளின் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன. இது, ஆயுதப் போட்டியைத் தூண்டும் என்று இந்தோனேசியா, மலேசியா முதலிய நாடுகள் கவலைப்படுகின்றன.