உலகில் மிக அதிகமான தடுப்பூசிகளை வழங்கும் நாடு சீனா!
2021-12-03 18:59:06

உலகின் 40விழுக்காட்டு மக்களுக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கை 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் நனவாக்க முடியாது என்று ஐ.நா தலைமை செயலாளரின் செய்தித் தொடர்பாளர் அண்மையில் தெரிவித்தார். இது பற்றிச் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சௌ லீஜியன் 3ஆம் நாள் கூறுகையில்,

கரோனா தடுப்புக்கு வலிமையான ஆயுதமான தடுப்பூசி உலகின் பொது உற்பத்திப் பொருளாக்கி மேலதிக மக்களுக்கு நன்மை கிடைக்கச் செய்ய வேண்டும் என்று சீனா எப்போதுமே கருதி வருகிறது. சீனா சொல்லிய வண்ணம் செயலாற்றுகிறது. உலகில் மிக அதிகமான தடுப்பூசிகளை வழங்கும் நாடாக சீனா விளங்குகிறது. பன்னாடுகளின் கரோனா தடுப்பில் சீனாவின் தடுப்பூசி முக்கிய பங்காற்றியுள்ளது. பெரும் வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

உலகத்துக்குக் குறிப்பாக வளரும் நாடுகளுக்கு மேலும் அதிகமான மற்றும் பாதுகாப்பான தடுப்பூசிகளை வழங்கச் சீனா இயன்ற அளவில் முயற்சி செய்து வருகிறது. உலகளவில் தடுப்பூசிகளின் நியாயமான பங்கீடு மற்றும் பயன்பாட்டை முன்னேற்றவும் சீனா பாடுபாடும் என்று அவர் வலியுறுத்தினார்.