ரஷிய-அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
2021-12-03 15:11:48

ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ப்ளின்கன் ஆகியோர் 2ஆம் நாள் ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் செயற்குழு கூட்டத்தின் போது சந்திப்பு நடத்தினர்.இரு தரப்பினரும், ரஷிய-அமெரிக்க உறவு, உக்ரைன் மோதல், ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை உள்ளிட்ட பொது அக்கறை கொண்ட அம்சங்கள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

லாவ்ரோவ் கூறுகையில், இவ்வாண்டு ஜுன் திங்கள் இரு நாட்டின் அரசுத் தலைவர்கள் எட்டியுள்ள ஒத்த கருத்துகளின்படி, தத்தமது நலன்களுக்கு மதிப்பளிக்கும் சமமான அடிப்படையில், அமெரிக்காவுடன் முழுமையான பேச்சுவார்த்தை நடத்த, ரஷியா விரும்புகிறது என்று தெரிவித்தார்.

ஒன்றுக்கொன்றான தூதாண்மை பணியை மீட்டெடுப்பது பற்றி தொடர்ந்து முயற்சி மேற்கொள்வதென அவர்கள் ஒப்புக்கொண்டனர்.