ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது சண்டை நிறுத்தம் பற்றிய தீர்மானம்
2021-12-03 10:47:45

ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் போது சண்டை நிறுத்தம் பற்றி சீனாவும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் வரைந்த தீர்மானம் 76ஆவது ஐ.நா பேரவையில் டிசம்பர் 2ஆம் நாள் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பல்வேறு தரப்புகள் அமைதி வழிமுறை மற்றும் தூதாண்மை வழிமுறையில் சர்வதேச மோதல்களைத் தீர்த்து, 2022ஆம் ஆண்டு பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்குவதற்கு முந்தைய 7ஆவது நாள் முதல் பெய்ஜிங் பாரலிம்பிக் விளையாட்டுப் போட்டி நிறைவடைவதற்கு பிந்தைய 7ஆவது நாள் வரை சண்டை நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒலிம்பிக், இளைஞர்களின் கனவுக்கு ஒளி ஊட்டி, இணக்கமான அமைதியான மற்றும் மேலும் அருமையான உலகத்தை உருவாக்க வேண்டும் என்றும் இதில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.