பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கு பெய்ஜிங்கின் சுற்றுச்சூழல் உத்தரவாதம்
2021-12-03 18:19:25

2020ஆம் ஆண்டில், சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் 10ஆயிரம் யுவான் அளவிலான உற்பத்தி மதிப்புக்கு, கார்பன் வெளியேற்றம் 0.41 டன் மட்டும் இருந்தது. இது, 2015 ஆம் ஆண்டை விட 26விழுக்காட்டுக்கு மேல் குறைந்துள்ளது. நாடு முழுவதும் கார்பன் குறைந்த நகரங்களின் ஆக்கப்பணிக்கு பெய்ஜிங்கின் பயனுள்ள அனுபவம் உதவிகரமாக இருக்கும். மேலும், பெய்ஜிங்கில் காற்று மாசுபாட்டை நிர்வாகிக்கும் வழிமுறை ஐ.நா.சுற்றுச்சூழல் பணியகத்தின் நடைமுறையாக்க மாதிரிகளில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது மேலும் சீராகி வரும் பெய்ஜிங் சுற்றுச்சூழல், நடைபெறவுள்ள பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பயனுள்ள உத்தரவாதம் அளிக்கும்.