இந்தியாவில் 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு உறுதி
2021-12-03 10:30:58

இந்தியாவின் தென் மாநிலமான கர்நாடகாவில் 2 பேருக்கு கோவிட்-19 இன் ஓமிக்ரான் தொற்று பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர்களுடன் தொடர்புடை 5 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

"நாட்டில் இதுவரை 2 பேருக்கு மட்டுமே ஓமிக்ரான் தொற்று பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. நோயாளிகள் இருவரில் ஒருவர் 66 வயதுடையவர் மற்றொருவர் 46 வயதுடையவர்  என்று மூத்த சுகாதார அமைச்சக அதிகாரி லாவ் அகர்வால் புது தில்லியில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சக அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த புதிய கரோனா வைரஸ் திரிபு பரவுவதை கட்டுப்படுத்த சர்வதேச பயணிகளுக்கு கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன என்பது தெரிகிறது.