காலநிலை மாற்றத்தில் சீனாவின் பங்களிப்பு
2021-12-04 16:28:46

காலநிலை மாற்றத்தில் சீனாவின் பங்களிப்பு_fororder_webwxgetmsgimg (1)

2021ஆம் ஆண்டு சீனாவைப் புரிந்து கொள்வது என்ற சர்வதேச மாநாடு டிசம்பர் 1 முதல் 4ஆம் நாள் வரை குவாங்சோ நகரில் நடைபெற்றது. அப்போது, சிங்ஹுவா பல்கலைக்கழகத்தின் எரியாற்றல் சுற்றுசூழல் மற்றும் பொருளாதார ஆய்வு கழகத்தின் தலைவர் சாங் சிலியாங் சீன ஊடகக் குழுமத்தின் செய்தியாளருக்குச் சிறப்பு பேட்டியளித்தார்.

2070ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் கார்பன் நடுநிலை இலக்கை நிறைவேற்றுவதாக இந்திய தலைமை அமைச்சர் அண்மையில் தெரிவித்தது குறித்து அவர் கூறுகையில், என் பார்வையில் இது ஆக்கப்பூர்வமான இலக்காகும். இந்திய வளர்ச்சிக்கான தேவையையும், தொழில் நுட்ப முன்னேற்றப் போக்கு, தொழில் நுட்பம் மற்றும் நிதி பெறப்படும் வாய்ப்பு ஆகியவற்றையும் இந்திய தலைவரான மோடி கருத்தில் கொண்டுள்ளார் என்று தெரிவித்தார்.

காலநிலை மாற்றச் சமாளிப்பில் இந்தியா உள்பட தெற்காசிய நாடுகளுடன் சீனா ஒத்துழைக்க கூடிய துறைகள் பற்றி அவர் கூறுகையில், சீன-இந்திய ஒத்துழைப்புக்கு பெரும் உள்ளார்ந்த ஆற்றல் உண்டு. இந்தியாவுக்கு சீனா தொடர்ந்து தொழில் நுட்ப ஆதரவு அளிக்க முடியும். எதிர்காலத்தில், புதிய எரிபொருள், புதுப்பிக்கவல்ல எரியாற்றல் ஆகிய துறைகளில் சீனா இந்தியாவுக்குத் தொடர்ந்து ஆதரவு மற்றும் உதவி அளிக்கும் என்று கூறினார்.

மேலும், உலகிலேயே பழம்பெறும் நாகரிகச் சிறப்பு வாய்ந்த நாடுகளான சீனாவும் இந்தியாவும் காலநிலை மாற்றக் கட்டுப்பாட்டுத் துறையில் ஆக்கப்பூர்வமாக ஒத்துழைக்க வேண்டும். இருநாடுகளின் ஒத்துழைப்பு, இருநாடுகள் மற்றும் இருநாட்டு மக்களுக்கு நன்மை தருவது மட்டுமல்ல, பிரதேச மற்றும் உலக காலநிலை மாற்றக் கட்டுப்பாட்டையும் மேம்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.