சீனாவைப் புரிந்து கொள்வது என்ற சர்வதேச மாநாடு நிறைவு
2021-12-04 16:06:55

2021ஆம் ஆண்டு சீனாவைப் புரிந்து கொள்வது என்ற சர்வதேச மாநாடு டிசம்பர் 4ஆம் நாள் சீனாவின் தெற்கிலுள்ள குவாங்சோ நகரில் நிறைவுற்றது. 6ஆவது முறை நடைபெற்ற இம்மாநாட்டில், 20க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 70க்கும் அதிகமான புகழ்பெற்ற அரசியல்வாதிகள், வியூகவாதிகள், அறிஞர்கள், தொழில் முனைவோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இம்மாநாட்டின் வரையறையும் அளவும் முன்கண்டிராத உயர்நிலையை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.