அடுத்த வாரம் வியன்னாவில் மீண்டும் நடைபெறும் பேச்சுவார்த்தை
2021-12-04 17:06:37

ஈரான் அணு ஆற்றல் பிரச்சினைக்கான பன்முக உடன்படிக்கை தொடர்பான தரப்புகளின் பிரதிநிதிகள் 3ஆம் நாள் ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் கூட்டத்தை ஒத்திவைக்க உடன்பட்டுள்ளனர். தொடர்புடைய பேச்சுவார்த்தை அடுத்த வாரத்தில் மீண்டும் நடைபெற உள்ளது.

இப்பேச்சுவார்த்தைக்கான சீனப் பிரதிநிதியும் வியன்னாவிலுள்ள ஐ.நாவுக்கான சீன நிரந்திரப் பிரதிநிதியுமான வாங் ஜுன் ஊடங்களிடம் கூறுகையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே உடன்படிக்கையை மீண்டும் நிறைவேற்றுவதற்கான 7ஆவது சுற்று பேச்சுவார்த்தை தொடங்கியது முதல், பல்வேறு தரப்புகளும் உணர்வுபூர்வமாக செயல்பட்டு வருகின்றன. இப்பேச்சுவார்த்தையில் திருப்புமுனை இன்னும் ஏற்படவில்லை என்ற போதிலும், கிடைத்துள்ள முன்னேற்றத்தைக் குறைந்து பார்க்க கூடாது என்றார்.