சீனா உயர்வேக வளர்ச்சியடைந்த காரணங்கள்
2021-12-04 17:50:07

சீனா உயர்வேக வளர்ச்சியடைந்த காரணங்கள்_fororder_微信图片_20211204172858

நூற்றுக்கணக்கான சீன மற்றும் வெளிநாட்டு விருந்தினர்கள் டிசம்பர் 1 முதல் 4ஆம் நாள் வரை சீனாவின் குவாங்சோ நகரில் ஒன்றுகூடி, 2021ஆம் ஆண்டு சீனாவைப் புரிந்து கொள்வது என்ற சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டனர். சீனாவின் வரலாறு, தற்போதைய நிலைமை, எதிர்காலம் ஆகியவற்றை பற்றி அவர்கள் விவாதம் நடத்தினர்.

சீனா உயர்வேக வளர்ச்சியடைந்த காரணங்கள்_fororder_微信图片_20211204172905

சீனத் தேசிய புதுமை மற்றும் வளர்ச்சி நெடுநோக்கு கழகத்தின் தலைவர் ட்செங் பீஜியான் கூறுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்று அனுபவங்களைச் செவ்வனே தொகுத்து வருகிறது. வெற்றிப் பெற்ற அனுபவங்கள் மற்றும் தோல்வி பெற்ற காரணங்களைத் தொகுத்த போது, சான்றுகளிலிருந்து உண்மையைத் தேடியும், மனதை விடுவித்தும், காலப்போக்கில் முன்னேறி வருகிறது. இது தான் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உயிராற்றல் கொண்டமைக்கு காரணமாகும் என்றார்.

சீனா உயர்வேக வளர்ச்சியடைந்த காரணங்கள்_fororder_微信图片_20211204172934

சீனாவின் பொருளாதார அமைப்பு சீர்திருத்த ஆய்வகத்தின் நிரந்தரத் துணைத் தலைவர் ஸாவ் ஐ கூறுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை, மக்களே முதன்மை என்ற கருத்து, சீர்திருத்தம் மற்றும் திறப்புப் பணியில் ஊன்றி நிற்பது ஆகியவை, சீனா உயர்வேக வளர்ச்சியடைந்த காரணங்களாகும் என்றார் அவர்.