குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டை வரவேற்கும் பசுமை நகரம்
2021-12-04 15:33:50

2022 பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளன. பசுமை, பகிர்வு, திறப்பு மற்றும் தூய்மை கொண்ட குளிர்கால ஒலிம்பிக் எதிர்பார்க்கப்படுகிறது. பெய்ஜிங் மாநகராட்சியின் செய்தி பணியகம் நவம்பர் 30ஆம் நாள் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் என்ற தலைப்பில் சிறப்பு செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது.

குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு அரங்குகள் அனைத்தும் உயர் வரையறையுடன் கூடிய பசுமை தொழில் நுட்பங்களோடு கட்டப்பட்டன. பெய்ஜிங்கின் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் நிலைமை குறிப்பீடு கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 10 விழுக்காடு அதிகரித்துள்ளது. 23 நீர்வழிகள் புதியாக உருவாக்கப்பட்டுள்ளன. குளிர்காலக் காட்சிக்கான தாவரங்களைக் கூடுதலாக நடும் பணி அடுத்த ஆண்டின் ஜனவரியில் நிறைவடையும். பசுவை வளர்ச்சியைத் தூண்டும் வகையில் அதிநவீன தொழில் முறைமை உருவாக்கப்பட்டு வருகிறது என்று இக்கூட்டத்தில் தகவல் வெளியாகியுள்ளது.