சீன தலைமை அமைச்சர்-சர்வதேச நிதி அமைப்பின் பொது செயலாளர் சந்திப்பு
2021-12-04 16:08:34

3ஆம் நாள் மாலை சீன தலைமை அமைச்சர் லி கெச்சியாங் பெய்ஜிங்கில் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை இயக்குநர் கெயோர்ஜியேவா அம்மையாரைச் சந்தித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான உறவுக்கு சீனா முக்கியத்துவம் அளித்து வருகின்றது. இருதரப்பு ஒத்துழைப்பை தொடர்ந்து ஆழமாக்க சீனா விரும்புகின்றது என்று லி கெச்சியாங் தெரிவித்தார்.

சீன பொருளாதார நிலைமையை லி கெச்சியாங் அறிமுகப்படுத்தினார். அவர் கூறுகையில்,

புதிய ரக கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதையும் பொருளாதார வளர்ச்சியையும் சீனா தொடர்ந்து ஒருங்கிணைத்து, நிதானமான ஒட்டுமொத்த கொள்கையை நடைமுறைப்படுத்தி, நிதானமான நாணய கொள்கையை மேற்கொள்ளும் என்றார்.

பொருளாதார மீட்சியை முன்னேற்றுவதற்கு சீனா மேற்கொண்ட நடவடிக்கைகளை கெயோர்ஜியேவா அம்மையார் உயர்வாக பாராட்டினார். சீனாவுடனான பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தி, உலக பொருளாதார மீட்சியை முன்னேற்ற சர்வதேச நாணய நிதியம் விரும்புகின்றது என்று அவர் தெரிவித்தார்.