சீனாவின் ஜனநாயகம் எனும் வெள்ளையறிக்கை வெளியீடு
2021-12-04 16:11:02

சீனாவின் ஜனநாயகம் எனும் வெள்ளை அறிக்கையை சீன அரசவையின் தகவல் தொடர்பு பணியகம் டிசம்பர் 4ஆம் நாள் வெளியிட்டது.

ஜனநாயகமானது, மனிதகுலத்தின் பொது மதிப்பும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன மக்களால் உறுதியுடன் பின்பற்றப்படும் முக்கிய கருத்தும் ஆகும். கடந்த 100 ஆண்டுகளில் சீனா மக்கள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நாடு, சமூகம் மற்றும் சொந்த தலைவிதியின் உண்மையான உரிமையாளராக மாறியுள்ளனர் என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சீனாவின் ஜனநாயகம், மக்களுக்குரிய ஜனநாயகமாகும். மக்களே உரிமையாளராக இருப்பது என்பது, சீன ஜனநாயகத்தின் சாராம்சம் மற்றும் மையமாகும். முழு நடைமுறை மக்கள் ஜனநாயகமானது, மிகப் பெருமளவிலான, மிக உண்மையான மற்றும் பயன்மிக்க சோஷலிச ஜனநாயகமாகும் என்று இவ்வறிக்கையில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

ஜனநாயக பாதையும் வடிவமும் வெவ்வேறானவை. ஜனநாயகம், அலங்காரப் பொருள் அல்ல. அதன் மூலம் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். குறிப்பிட்ட சில நாடுகளின் சிறப்பு காப்புரிமைக்குப் பதிலாக, பல்வேறு நாட்டு மக்களின் உரிமை நலன் தான் ஜனநாயகமாகும். ஒரு நாட்டின் ஜனநாயகம் பற்றி அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டும் மதிப்பீடு செய்ய வேண்டும், நாட்டிற்கு வெளியே உள்ள சிலரால் அல்ல என்றும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.