கரோனா வைரஸின் ஓமிக்ரோன் என்னும் புதிய திரிபு அமெரிக்காவில் பரவக் கூடும்
2021-12-04 17:11:06

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குநர் டிசம்பர் 3ஆம் நாள் கூறுகையில், கரோனா வைரஸின் டெல்டா என்னும் புதிய திரிபு, தற்போதைய அமெரிக்காவின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. ஆனால், ஓமிக்ரோன் என்னும் திரிபு விரைவில் அமெரிக்காவில் பெருமளவில் பரவக்கூடும் என்றார்.

மேலும், அமெரிக்க மக்கள் வெகு விரைவில் கரோனா வைரஸ் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டு, தொடர்புடைய தடுப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். தற்போது, அமெரிக்காவைச் சேர்ந்த 7 மாநிலங்களில் ஓமிக்ரோன் என்னும் திரிபு கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.