வைரஸ் பரவல் தடுப்புக்கான சீனாவின் கொள்கைக்கு வெளிநாட்டு ஊடகங்கள் பாராட்டு
2021-12-04 17:00:08

கரோனா வைரஸின் ஓமிக்ரோன் என்னும் புதிய திரிபு உலகளவில் பரவி வருகிறது. பல்வேறு நாடுகள் அவசரத் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளன. புதிய கட்டத் தடுப்புப் பணியின் போது, அமெரிக்காவின் ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம், சிங்கப்பூரின் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேடு உள்ளிட்ட ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களில், வைரஸ் பரவல் தடுப்புக்கான சீனாவின் கொள்கையை பாராட்டியுள்ளன.