குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கு தயாராகிறது சீனா
2022-01-14 20:36:17

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. சீனா மீதான உலகின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற சீனா தயாராகியுள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங்வென்பின் 14ஆம் நாள் தெரிவித்தார்.

ஜனவரி 10ஆம் நாள்,  சி.ஜி.டி.என் எனும் சீன சர்வதேச தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த வட அமெரிக்க நிலையத்தால் வாஷிங்டன் தலைநகர் விளையாட்டு அரங்கில் நடத்தப்பட்ட பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கான விளம்பர நிகழ்ச்சியில், அமெரிக்க மக்கள் பலர்,  தங்களது எதிர்பார்ப்புகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

இது குறித்து வாங் வென்பின் கூறுகையில்

இந்த விளம்பர நிகழ்ச்சியில் இருந்து, பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு, உலகின் குளர்கால ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் மற்றும் பனி விளையாட்டு ஆர்வளர்களின் சிறந்த நிகழ்ச்சி என்று உணர முடிகிறது. எளிமை, பாதுகாப்பு மற்றும் சிறந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை சீனா நடத்துவதன் மூலம், உலகிற்கு ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் ஆற்றலைக் கொண்டு வரும் என்று தெரிவித்தார்.