சீன-ஈரான் வெளியுறவு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை
2022-01-15 17:23:11

ஜனவரி 14ஆம் நாள், சீன அரசவையின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ ஜியாங் சூ மாநிலத்தின் ஊ சி நகரில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அபுதுலாஹியானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கிடையிலான பன்முக ஒத்துழைப்பு திட்டத்தை துவங்குவதாக இருதரப்பினரும் அறிவித்தனர்.

சீனா, ஈரானுடன் இணைந்து, இரு நாட்டுத் தலைவர்களின் பொது கருத்துகளை நடைமுறைப்படுத்தி, இரு நாட்டு பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவை முன்னேற்ற விரும்புகின்றது என்று வாங் யீ தெரிவித்தார்.

சீனா தனது சொந்த நலனைப் பேணிக்காப்பதற்கு ஈரான் உறுதியாக ஆதரவு அளிக்கின்றது. ஒரே சீனா என்ற கொள்கையில் ஊன்றி நின்று வருகின்ற ஈரான், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற ஆக்கப்பணியில் ஆக்கப்பூர்வமாக கலந்துகொள்ளும் என்று அபுதுலாஹியான் ஈரான் அரசுத் தலைவரின் சார்பாக தெரிவித்தார்.