|
![]() |
1949ஆம் ஆண்டில் நவ சீனா நிறுவப்பட்டதும், மத நம்பிக்கை சுதந்திரம் என்ற கொள்கையை சீனா வகுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது. நாட்டு நிலைமைக்கு ஏற்ற அரசியல்-மத உறவை உருவாக்கியுள்ளது. சீன குடி மக்கள் சுய விருப்பத்துடன் மத நம்பிக்கையை தெரிவு செய்து, வெளிபடுத்த முடியும். பல்வேறு மதங்கள் சமநிலையில் இசைவாக இயங்குகின்றன. அவற்றுக்கிடையே சர்ச்சை இல்லை. மதத்தை நம்புபவரும் நம்பாதவரும் ஒன்றுபட்டு, பரஸ்பரம் மதிப்பு அளிக்கின்றனர்.
சீன குடியரசின் குடி மக்களுக்கு மத நம்பிக்கை சுதந்திரம் உண்டு. மதத்தை நம்ப வேண்டும் அல்லது நம்பக் கூடாது என்பது பற்றி நாட்டின் எந்த துறையும், எந்த சமூக நிறுவனங்களும் மற்றும் எவரும் குடி மக்களை கட்டாயப்படுத்தக் கூடாது. மதத்தை நம்பும் மக்களுக்கும் நம்பாத மக்களுக்கும் இடையே பாகுபாடு காட்டக் கூடாது. இயல்பான மத நடவடிக்கைகளை நாடு பேணிகாக்கிறது. மதத்தைப் பயன்படுத்தி, சமூக ஒழுங்கு, மக்களின் உடல் நலம் மற்றும் நாட்டின் கல்வி முறைக்கு தீங்குவிளைவிக்கும் நடவடிக்கைகளில் எவரும் ஈடுபடக் கூடாது. மத நிறுவனங்களும் மத விவகாரங்களும் வெளிநாட்டு சக்திகளால் கட்டுப்படுத்தப்படக் கூடாது என்று சீன குடியரசு அரசியல் அமைப்பு சட்டம் கூறுகிறது.
மத நம்பிக்கையைப் பொருட்படுத்தாமல் குடி மக்களுக்கு தேர்தல் உரிமையும், தேர்ந்தெடுக்கப்படும் உரிமையும் உண்டு. மத நிறுவனங்களின் சட்டப்பூர்வ சொத்து சட்ட பாதுகாப்பில் உள்ளது. மதத்துக்கும் கல்விக்கும் இடையில் தொடர்பு இல்லை. மத நம்பிக்கையை பொருட்படுத்தாமல் குடி மக்கள் சட்டத்தின்படி சமநிலையில் கல்வி வாய்ப்பு பெறுகின்றனர். மொழி, எழுத்துக்கள், பழக்கவழக்கங்கள், மத நம்பிக்கை ஆகியவற்றை பல்வேறு தேசிய இன மக்கள் மதிக்க வேண்டும். வேலை வாய்ப்பு பெறுவதில் வெவ்வேறான மத நம்பிக்கை கொண்ட குடி மக்களுக்கு பாகுபாடு செய்யப்படவில்லை. விளம்பரம் மற்றும் வணிக சின்னத்தில் தேசிய இனம் மற்றும் மத நம்பிக்கை பற்றிய பாகுபாடு அம்சம் இருக்கக் கூடாது. சீனாவின் தேசிய இனத் தன்னாட்சி சட்டம், பொது குடிமை ஆட்சிச் சட்டம், கல்வி சட்டம், உழைப்பு சட்டம், கட்டாய கல்வி சட்டம், தேசிய மக்கள் பேரவை பற்றிய தேர்தல் சட்டம், கிராமவாசி கமிட்டி உருவாக்க சட்டம், விளம்பர சட்டம் ஆகியவற்றில் மேற்கூறியவவை வகுக்கப்படுகின்றன.
மத நடவடிக்கைகளுக்கான இடங்களின் சட்டப்பூர்வ நலனைப் பேணிகாக்க, 1994ஆம் ஆண்டின் ஜனவரி திங்கள், மத நடவடிக்கைகளுக்கான இடம் பற்றிய கட்டுப்பாட்டு விதிமுறையை சீன அரசு வெளியிட்டது. இதையடுத்த பிப்ரவரி திங்கள், சீன குடியரசு உள்நாட்டிலுள்ள அந்நியர்களின் மத நடவடிக்கைகளைப் பற்றிய கட்டுப்பாட்டு விதிமுறையை சீனா வெளியிட்டது. சீனாவில்லுள்ள வெளிநாட்டவர்களின் மத நம்பிக்கை சுதந்திரத்தை மதித்து, சீன மத வட்டாரத்துடன் நட்பு ஒத்துழைப்பையும் பரிமாற்றத்தையும் சீனா பாதுகாக்கிறது.
மத குருமாரும் பணியாளரும் செயல்படுத்தும் இயல்பான மத நடவடிக்கைகள் மற்றும் விவகாரங்களும் மத நம்பிக்கையாளர் நடவடிக்கைகளுக்கான இடங்களில் அல்லது சொந்த வீட்டில் நடைமுறைப்படுத்தும் இயல்பான மத நடவடிக்கைகளும், எடுத்துக்காட்டாக, புத்தரை வழிபடுவது, பன்ன ஓதுவது, தொழுகை செய்வது, பிரார்த்தனை செய்வது, புத்த மதத்தை பிரச்சாரம் செய்வது, கூட்டாக ஞானஸ்நானம் செய்விப்பது, துறவியாக்குவது, ரம்ஜான் நோன்பு(Ramadan/fast), கொண்டாடுவது ஆகியவை சட்டத்தினால் பாதுகாக்கப்படுகின்றன. எவரும் அவற்றில் தலையிடக் கூடாது.
உகலில் பல நாடுகளை போல, மதத்தை கல்வியிலிருந்து பிரிப்பது என்ற கொள்கையை சீனா நடைமுறைப்படுத்துகிறது. தேசிய கல்வியில் மாணவர்களுக்கு மத கல்வியை கற்றுக் கொடுக்கவில்லை. சில உயர் கல்வி நிலையங்களிலும் ஆய்வகங்களிலும் மதம் பற்றிய கல்வியும் ஆராய்ச்சியும் இடம்பெறுகின்றன. மத நிறுவனங்கள் நடத்தும் மதப் பள்ளிகளில் மத பிரிவுகளின் தேவைக்கு ஏற்ப மத தொழிற் கல்வி நடத்தப்படுகிறது.
நீண்டகால வரலாற்றில் சீனாவின் மத பண்பாடு, சீன பாரம்பரிய சிந்தனை பண்பாட்டின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. சமூகத்துக்கு சேவை புரிவது, மக்களுக்கு நன்மை பயப்பது ஆகியவற்றை பல்வேறு மதங்கள் முன்மொழிகின்றன.
|