வெளிநாடுகளுடன் மத பரிமாற்றம்
சீனாவின் புத்த மதம், இஸ்லாமிய மதம், கத்தோலிக்க மதம், கிறிஸ்தவ மதம் ஆகியவை வெளிநாடுகளிலிருந்து வந்துள்ளன. இந்த மதங்கள் உலகளாவிய மதங்களாகும். உலகில் முக்கிய இடங்களை வகிக்கின்றன. பல நாடுகளிலும் பிரதேசங்களிலும் இந்த மதங்களுக்கு பல நம்பிக்கையாளர் உண்டு. சில மதங்கள் சில நாடுகளில் தேசிய மதமாக கருதப்படுகின்றன.
நவ சீனா நிறுவப்பட்ட பின், சீன மத துறையின் வெளிநாட்டு பரிமாற்றம் இடைவிடாமல் வளர்ச்சியுற்று வருகிறது. எடுத்துக்காட்டாக, சீனாவின் புத்த மத வட்டாரம் தாய்லாந்து, தென் கொரியா, ஜப்பான், மியன்மார், இலங்கை, வியட்நாம் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் பல வகையான அரசு சாரா மத பரிமாற்றம் செய்கிறது. சீனாவின் புத்தரின் பல்லும் sariraவும் தாய்லாந்து, மியன்மார், இலங்கை முதலியவற்றில் வழிபடப்படுகின்றன. தாய்லாந்து மத வட்டாரம் சீனாவின் திபெத் மத வட்டாரத்துடன் குறிப்பிட்ட காலத்தில் மதவியல் பரிமாற்ற முறைமையை நிறுவியுள்ளது.
தவிர, மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா வின் அழைப்பின் பேரில், சீனாவின் பல்வேறு பெரிய மத நிறுவனங்கள் அங்கு பயணம் மேற்கொண்டுள்ளன. அங்குள்ள மதத்தை தெரிந்து கொண்டு, அங்குள்ள மக்கள் சீனாவின் மதத்தை தெரிந்து கொள்வதற்கு இது துணை புரியும்.

(புத்தரின் பல்லும் sariraவும் காட்சிக்கு வைக்கப்படுவது)
1 2