• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[மத நிலை]
சீனாவில் மத நிலை

பல மதங்கள் உள்ள நாடு சீனா ஆகும். புத்த மதம், தௌ மதம், இஸ்லாமிய மதம், கத்தோலிக்க மதம், கிறிஸ்தவ மதம் ஆகியவற்றைப் பின்பற்றும் மத நம்பிக்கையாளர்கள் சீனாவில் உள்ளனர்.

தற்போது சீனாவில் 10 கோடி மத நம்பிக்கையாளர்கள் உள்ளனர். 85 ஆயிரம் மத வழிபாட்டு இடங்கள் உள்ளன. மத குருமார் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை 3 லட்சம் ஆகும். 3000க்கு அதிகமான மத நிறுவனங்களும், 74 மதப் பள்ளிகளும் உள்ளன என்று பூர்வாங்க புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

சீனாவில், சீன புத்த மத சங்கம், சீன தௌ மத சங்கம், சீன இஸ்லாமிய மத சங்கம், சீன கத்தோலிக்க மத நாட்டுபற்று சங்கம், சீன கத்தோலிக்க மத பிஷப் குழு, சீன கிறிஸ்தவ மத நாட்டுபற்று கமிட்டி, சீன கிறிஸ்தவ மத சங்கம் முதலியவை நாடெங்கும் பரவியுள்ளன. பல்வேறு மத நிறுவனங்கள் தங்களது விதிமுறைகளுக்கிணங்க தேர்தல் நடத்தி, தலைவர்களையும் தலைமை நிறுவனங்களையும் தேர்ந்தெடுக்கின்றன. அவை, மத விவகாரங்களில் சுதந்திரமாக செயல்பட்டு, தேவைக்கு ஏற்ப மதப் பள்ளிகளை நிறுவி, மத திருமறையை அச்சடித்து, மத பத்திரிகைகளை வெளியிட்டு, பொது நல சமூக சேவையில் ஈடுபடுகின்றன.

சிறுபான்மை தேசிய இனங்களின் இலக்கிய கலை இதழ்கள் மேம்பட்டுள்ளன. தற்போது, சீனாவில் 100க்கும் அதிகமான வகைகளில் பல்வேறு சிறுபான்மை தேசிய இனங்களின் இலக்கிய கலை பத்திரிகைகள் காணப்படுகின்றன. கவிதை, இசை, நுண்கலை, திரைப்படம் முதலியவை பற்றிய சிறப்பு இதழ்கள் சில பிரதேசங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. 20க்கும் அதிகமான இதழ்கள் சிறுபான்மை தேசிய இன மொழியில் வெளியிடப்படுகின்றன. சீனாவில் தேசிய இன தன்னாட்சி பிரதேசங்களில் வெளியிடப்பட்ட நூல், பத்திரிகை, இதழ் முதலியவை பெருமளவில் அதிகரித்து வருகின்றன. சிறுபான்மை தேசிய இன மொழியில் வெளியிடப்பட்ட நூல்கள் மட்டுமே 3400 வகைகளுக்கும் அதிகமாகும்.

1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040