• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[மத நிலை]

முக்கிய மதங்கள்

புத்த மதம்

கி. பி. சுமார் முதல் நூற்றாண்டில் புத்த மதம் சீனாவில் பரவியது. கி. பி. 4வது நூற்றாண்டில் இது பரந்தளவில் பரவி, படிப்படியாக சீனாவில் மிக செல்வாக்குரிய மதமாக மாறியுள்ளது. சீனாவின் புத்த மதத்தில் ஹான் மொழி, திபெத் மொழி, பாலி மொழி ஆகிய 3 பெரிய மொழி குடும்பங்கள் இடம்பெறுகின்றன. இம்மூன்று மொழி குடும்பங்களின் துறவிகளின் எண்ணிக்கை 2 லட்சமாகும். தற்போது சீனாவில் 13 ஆயிரம் வெளிப்படையான மத கோயில்களும், 33 மத பள்ளிகளும் உள்ளன. சுமார் 50 வகையான மத பத்திரிகைகள் காணப்படுகின்றன.

திபெத் புத்த மதம் சீன புத்த மதத்தின் ஒரு கிளையாகும். திபெத் தன்னாட்சி பிரதேசம், உள் மங்கோலிய தன்னாட்சி பிரதேசம், சிங் ஹாய் மாநிலம் உள்ளிட்ட இடங்களில் பரவியுள்ளது. திபெத், உள்மங்கோலிய, யு கு, மன் பா, லொ பா மற்றும் து இனத்தவர்கள், சுமார் 70 லட்சம் பேர் பொதுவாக திபெத் புத்த மதத்தை நம்புகின்றனர். முக்கியமாக சீனாவின் தென் மேற்கு பகுதியிலுள்ள யுன் நான் மாநிலத்தின் சி சுவான் பான் நா தை இனத் தன்னாட்சி பகுதி, தே ஹுங் தை-ஜிங் போ இனத் தன்னாட்சி பகுதி, சி மாவ் பகுதி முதலிய பிரதேசங்களில் பாலி மொழி புத்த மதம் அமைந்துள்ளது. தை, பு லாங், ஆ க்ஷங், வா ஆகிய இன மக்கள் இம்மதத்தின் மீது நம்பிக்கை கொள்கின்றனர். இதுவரை 10 லட்சம் நம்பிக்கையாளர்கள் உள்ளனர். ஹான் புத்த மதத்தின் நம்பிக்கையாளர்கள் முக்கியமாக ஹான் இன மக்கள் ஆவர். அவர்கள் சீனாவின் பல்வேறு இடங்களில் பரவி வாழ்கின்றனர்.

(ஷௌ லின் கோயில்)

தௌ மதம்

தௌ மதம் சீனாவில் பிறந்தது. கி. பி. 2வது நூற்றாண்டில் தோன்றிய இந்த மதம், இன்று வரை 1800க்கு அதிகமான ஆண்டுகால வரலாறு உடையது. பண்டைய சீனாவின் இயற்கை வழிபாட்டையும் மூதாதையர் வழிபாட்டையும் இது பின்பற்றுகிறது. முன்பு இதில் பல பிரிவுகள் இருந்தன. பின்னர், சுவான் ச்சேன் எனவும் ச்சேங் யி எனவும் 2 பெரிய மத பிரிவுகளாக உருவெடுத்தன. ஹான் இன மக்களிடையே ஓரளவு செல்வாக்கு பெற்றுள்ளது. இம்மதத்தில் சேர்வதற்கு கண்டிப்பான சடங்கும் விதிகளும் இல்லாமல் இருப்பதால், அதன் நம்பிக்கையாளரின் எண்ணிக்கையைக் கணக்கிடுவது கடினம். தற்போது சீனாவில் 1500 தௌ மத கோயில்கள் காணப்படுகின்றன. சுமார் 25 ஆயிரம் ஆண் பெண் தௌ மத நம்பிக்கையாளர் உள்ளனர்.

(சிங் சேங் மலை)

இஸ்லாமிய மதம்

கி. பி. 7வது நூற்றாண்டில் இஸ்லாமிய மதம் சீனாவில் பரவியது. சீனாவின் ஹுய், உய்கூர், தாதார், கர்கஸ், ஹசாக், உஸ்பெக், துங் சியாங், லாசா, பாவ் ஆன் முதலிய சிறுபான்மை தேசிய இனத்தின் 1 கோடியே 80 லட்சம் மக்களிடையே, ஏகப்பெரும்பாலோர் இஸ்லாமிய மதத்தை நம்புகின்றனர். சின் ஜியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசம் மற்றும் நிங் சியா ஹுய் இனத் தன்னாட்சி பிரதேசத்திலும் கான் சு, சிங் ஹாய், யுன் நான் முதலிய மாநிலங்களிலும் சீனாவின் முஸ்லிம்கள் முக்கியமாக குழுமி வாழ்கின்றனர். தற்போது சீனாவில் 30 ஆயிரத்துக்கு அதிகமான மசூதிகள் அமைந்துள்ளன. 40 ஆயிரம் இமாம்கள் உள்ளனர்.

(நிங் சியா ஹு இனத் தென்னாட்சி பிரதேசத்தில் மசூதி)

கத்தோலிக்க மதம்

கி. பி. 7வது நூற்றாண்டு முதல் கத்தோலிக்க மதம் சீனாவில் பரவியுள்ளது. 1840ஆம் ஆண்டு அபினி போருக்குப் பின், சீனாவில் பெருமளவில் பரவியுள்ளது. தற்போது, சீன கத்தோலிக்க சிருசபைக்கு 100 மறை மாவட்டங்கள் உள்ளன. மத நம்பிக்கையாளர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை நெருங்கியுள்ளது. 5000 தேவாலயங்களும் நிறுவனங்களும் அதற்கு உண்டு. 12 மடங்களை அது துவக்கியுள்ளது. சுமார் 20 ஆண்டுகளாக, 1500 இளம் கத்தோலிக்க அருள் தந்தைகளை சீன கத்தோலிக்க திருச்சபை வளர்த்துள்ளது. மேற்படிப்புக்காக அவர்களில் 100க்கு அதிகமானோர் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். வாழ் நாள் முழுவதும் கத்தோலிக்க மதத்தை நம்பி இதற்கு சேவை புரிவதாக 200க்கு கூடுதலான கன்னித்துறவிகள் வாக்குறுதி அளித்துள்ளனர். ஆண்டு தோறும் சுமார் 500 மக்கள் ஞானஸ்நானம் ஏற்றுக்கொள்கின்றனர். 30 லட்சம் புனித விவிலியம் நூல்கள்(Holy Bible) அச்சடிக்கப்பட்டுள்ளன.

(பெய்ஜிங்கில் தேவாலயம்)

கிறிஸ்தவ மதம்

கி. பி. 19வது நூற்றாண்டின் தொடக்கத்தில் கிறிஸ்தவ மதம் சீனாவில் பரவியது. அபினி போருக்குப் பின் பெருமளவில் பரவியுள்ளது. 1950ஆம் ஆண்டில் தன்னாட்சி, சுய வளர்ப்பு, சுய பரவல் என்ற நடவடிக்கையை இம்மதம் மேற்கொண்டது. ஏகாதிபத்தியத்தின் பாதிப்பை அழித்தொழித்து, நாட்டுபற்று எழுச்சியை வளர்ப்பதற்காக கிறிஸ்தவ மத வட்டாரம் பாடுபட வேண்டும் என்று அது வேண்டுகோள் விடுத்தது. தற்போது சீனாவில் 1 கோடி கிறிஸ்தவர்களும் 18 ஆயிரம்மிஷனரிகளும்(missionary) உள்ளனர், 12 ஆயிரம் தேவாலயங்கள் அமைந்துள்ளன.


1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040