• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சுற்றுசூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள்]

சதுப்பு நிலத்தின் பாதுகாப்பு

சீனா, 1992ல் சர்வதேச சதுப்பு நில பொது ஒப்பந்தத்தில் சேர்ந்தது முதல் சதுப்பு நிலங்களை நடுவன் அரசு மும்முரமாக காப்பாற்றி மிட்டுள்ளது. சீர்குலைக்கப்பட்ட ஒரு தொகுதி இயற்கை சதுப்பு நிலங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. 2002ம் ஆண்டின் இறுதி வரை சீனா 353 பல்வகை சதுப்பு நில பாதுகாப்பு பிரதேசங்களை உருவாக்கியுள்ளது. கடல், ஏரி, ஆறு ஆகியவற்றைச் சேர்ந்த மணல் திட்டுகளும் காடுகளின் ஒரங்களில் உள்ள சதுப்பு நிலங்களும் இவற்றில் இடம்பெறுகின்றன. இவற்றில் 21 இடங்கள் சர்வதேச முக்கிய சதுப்பு நிலப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. அதன் மொத்த நிலப்பரப்பு 30 லட்சத்து 30 ஆயிரம் ஹேக்டராகும். 2000ம் ஆண்டு நவம்பர் திங்கல் சீனாவின் சதுப்பு நில பாதுகாப்பு செயல் திட்டம் நடைமுறைக்கு வர துவங்கியது. அரசு வனத்தொழில் கழகத்தின் தலைமையில் அரசவையின் 17 அமைச்சங்களும் கமிட்டிகளும் இத்திட்டத்தை வகுத்துள்ளன. இத்திட்டப்படி 2010ம் ஆண்டுக்குள் போக்கை தடுத்து நிறுத்தும், 2020ம் ஆண்டுக்குள் அழிவுபட்ட அல்ல இழந்த சதுப்பு நிலங்களைப் படிப்படியாக மீட்கப்படும்.

1 2 3 4 5
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040