• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சுற்றுசூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள்]

உயிரின வகைகளின் பாதுகாப்பு

பல்வகை உயிரினச் சூழல் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் முதலில் சேர்ந்த நாடுகளில் சீனா ஒன்று. இப்வொப்பந்தம் தொடர்பான சர்வதேச விவகாரங்களில் சீனா எப்போதுமே உற்சாகத்துடன் பங்கு கொள்கின்ரிது. சர்வதேச ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் முக்கிய பிரச்சினைகளை பற்றி தன் கருத்தை சீனா தெரிவிக்கின்றது. இவ்வொப்பந்தத்தின் செயல் திட்டத்தை முதன்முதலாக நிறைவேற்றிய ஒரு சில நாடுகளில் சீனாவும் ஒன்றாகும். 1994ல் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் செயல் திட்டத்திற்கு ஏற்ப உயிரின வாழ்க்கை சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகலை மேற்கொள்ள முடியும். வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் படி காட்டு விலங்குகலை வேபடையாடும் குற்றச்செயல்கள் அனைத்துக்கும் தண்டனை விதிக்கப்படும். அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும்.

பல்வகை உயிரினப் பாதுகாப்பில் அரிசின துறைகள் முக்கியத்துவம் அளித்து வருகின்றன. 2003ம் ஆண்டு ஜனவரி திங்கள் சீன அறிவியல் கழகம் அழிவின் விளிம்பிலுள்ள பராமரிப்புத் திட்டப்பணியைத் துவக்கியுள்ளது. 15 ஆண்டுகளுக்குள் அதன் நிர்வாகத்தின் கீழுள்ள 12 தாவர பூங்காக்களின் பாதுகாப்பின் கீழுள்ள 13 ஆயிரம் வகை செடிகொடி 21 ஆயிரம் வகைகளாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அத்திடன் 458 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புடைய உலகில் மிக பெரிய தாவர பூங்கா ஒன்றும் நிறுவப்படும். இத்திட்டப்பணியில் அழிவுன் விளிம்பிலுளஅள அரிய தாவரங்களை ஒன்று திரட்டுவதற்கு 30 கோடி யூவானை ஒதுக்கீடு செய்யும். சிங் லின் வூஹான் சிகவான் பான்நா பெய்சிங் முதலிய இடங்களை மையமாகக் கொள்ளும் மைய மரபணு கிடங்குகள் அமைக்கப்படும்.

அழிவின் விளிம்பில் தத்தளிக்கும் காட்டு விலங்குகளைக் காப்பாற்றும் பணியும் பூர்வாங்க ரீதியில் பயன் தந்துள்ளது. சீனாவில் 250 காட்டு விலங்குகளின் வளர்ப்பு மையங்கள் கட்டப்பட்டுள்ளன. இவை ராட்சத் பன்டா கொண்டையுடன் கூடிய நாரை உள்ளிட்ட 7 வகை விலங்குகளைக் காப்பார்றுவதற்கு பொறுப்பேற்கின்றன. தற்போது சீனாவின் தேசிய செல்வம் எனவும் விலங்குகளின் உயிருள்ள புதை படிவம் எனவும் அழைக்கப் படும் காட்டு ராட்ச பன்டாக்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் அதிகமாகும். அவற்றின் வாழ்க்கை சூழல் நிலையும் தொடர்ந்து மேம்பட்டுள்ளது. கொண்டையுடன் கூடிய நாரைகளின் எண்ணிக்கை 7யிலிருந்து 250 ஆக அதிகரித்து அழிவின் விளிம்பில் இருந்து மீண்டுள்ளது. யாங்சி முதலைகளின் எண்ணிக்கை 10 ஆயிரமாகும். ஹைநான் சரிவு நிலமானின் எண்ணிக்கை 26யிலிருந்து 700 ஆக அதிகரித்துள்ளது. மிகவும் அரிதான புலிகள் வடகிழக்கு சீனா கிழக்கு சீனா தென் சீனா ஆகிய இடங்களில் அவ்வப்போது காணப்படலாம். வெள்ளை துடுப்புடன் கூடிய டால்பின் மீனின் செயற்கை இனப்பெருக்கத்துக்கான ஆராய்ச்சி விரைவாக நடைபெற்ற வருகின்றது. சட்டத்துக்குப் புறம்பான வேட்டையாடல் நடவடிக்கைக்கு விடா முயற்சியுடன் தண்டனை விதிப்பது அதிலும் சர்வதேச சமூகத்தின் பல விலங்கு பாதுகாப்பு நிறுவனஹ்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றின் காரணமாக வெறிப்பிடித்த முறையில் படுகொலை செய்யப்பட்டு குறைந்து வரும் திபெத் டாக்கின் ஆடுகள் உயிர் வாழமுடிந்தது. அவற்றின் எண்ணிக்கை இப்போது 70 ஆயிரமாகும்.


1 2 3 4 5
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040