• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[மக்கள் தொகையும் தேசிய இனங்களும்]
மக்கள் தொகை

தைவான் மாநிலத்தில், நிலப்பரப்பு குறைவு. மக்கள் தொகை அதிகம். 2001ஆம் ஆண்டின் இறுதி வரை, தைவானின் மொத்த மக்கள் தொகை, 2 கோடியே 24 லட்சமாக இருந்தது. ஒரு சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில், 619 பேர் இருக்கின்றனர்.


தைவானில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகம். 2001ஆம் ஆண்டின் இறுதி வரை, 0-14 வயதான மக்கள் தொகையின் விகிதம், 25.8 விழுக்காடு வரை குறைந்துள்ளது. 15-64 வயதான மக்கள் தொகையின் விகிதம் 67.4 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டோர், மொத்த மக்கள் தொகையில், 6.8 விழுக்காடாகும்.


தைவானில், குடிமக்களின் பரவிவாழ்வது சமமற்றதாக உள்ளது. தைவானின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதியான மலை பிரதேசம், கடல் மட்டத்திற்கு மேலே 1000 மீட்டர் உயரத்தில் உள்ளது. அங்கு ஒரு சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில், சராசரியாக 20 பேர் மட்டுமே வசிக்கின்றனர். நகரங்களில், ஒரு சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில், சராசரியாக 4800க்கு அதிகமானோர் வசிக்கின்றனர். தைய்பே, காவோஸியுங், தைச்சுங், ஜிலாங், சின்சு, ஜியாய் மற்றும் தைனான், மக்கள் தொகை மிக அதிகமான 7 நகரங்களாகும். இந்த 7 நகரங்களின் நிலப்பரப்பு, தைவானின் மொத்த நிலப்பரப்பில் 2.9 விழுக்காடாகும். இந்நகரங்களின் மக்கள் தொகை, மொத்த மக்கள் தொகையில் 31 விழுக்காடாகும்.


தைவானில், சமூக பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப, மக்கள் தொகை பற்றிய கொள்கை சரிப்படுத்தப்பட்டு வருகின்றது. 1965ஆம் ஆண்டில், "குடும்ப நலத் திட்டத்தை" தைவான் நடைமுறைப்படுத்த துவங்கியது. திருமண வயது மற்றும் குழந்தை பெறும் வயது மீது கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டது. ஒவ்வொரு தம்பதியும் ஒரு குழந்தை பெற அனுமதி உண்டு. இரண்டு குழந்தைகளுக்கு மேல் கிடையாது. அதன் பிறகு, பிறப்பு விகிதம் படிப்படியாக குறைந்து வந்தது. மக்கள் தொகையின் வளர்ச்சியை மட்டுப்படுத்த இது உதவியது. ஆனால், மக்கள் தொகை வளர்ச்சியின் குறைவுடன், முதியோர் பிரச்சினை, புதிதாக அதிகரிக்கும் பணியாளர்களின் எண்ணிக்கை குறைவது உள்ளிட்ட பல புதிய பிரச்சினைகள் தோன்றின. 1990ஆம் ஆண்டில், தைவான் அதிகார வட்டாரம் மக்கள் தொகை பற்றிய கொள்கையை திருத்தியது. இரண்டு குழந்தைகளை மட்டும் பெறுவது நல்லது; ஆனால் மூன்றுக்கு மேல் எப்போதும் வேண்டாம் என்று வரம்பு உயர்த்தப்பட்டது. கடந்த சில ஆண்டுகளில், குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை உயர்த்தும் பொருட்டு, தைவான் அதிகார வட்டாரம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040