தேசிய இனம்
தைவானில் ஹான், மங்கோலியா, Hui, Miao, Gaoshan உள்ளிட்ட பல தேசிய இன மக்கள் கலந்து வாழ்கின்றனர். இவர்களில் 97 விழுக்காட்டினர் ஹான் இனத்தைச் சேர்ந்தவர்கள். ஹான் இன மக்களில், தெற்கு புஜியான் மக்களும் ஹக்கா மக்களும் இடம்பெறுகின்றனர். தெற்கு புஜியான் மக்கள் முன்பு, புஜியான் மாநிலத்தில் உள்ள Quanzhou, Zhangzhou ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்கள். ஹக்கா மக்கள், முன்பு Guangdong மாநிலத்தின் Meizhou, Chaozhou ஆகிய நகரங்களிலிருந்து தைவானுக்கு குடிபெயர்ந்தவர்கள்.
தைவானில் Gaoshan இனம், முக்கிய சிறுபான்மை தேசிய இனமாகும். Gaoshan இன மக்களின் தோற்றம் பற்றி, வெவ்வேறான விளக்கங்கள் உண்டு. ஆனால், உள்ளூர் Gaoshan இன மக்களின் முன்னோடிகள், சீனப் பெருநிலப்பகுதியிலிருந்து தைவானுக்கு குடிபெயர்ந்தவர்கள் என்பதை மேலும் அதிகப்படியான ஆய்வுகள் காட்டுகின்றன. தைவானின் Gaoshan இனம், இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று கடல் மட்டத்திலும், இன்னொன்று மலைப்பகுதியிலும் வசிக்கின்றன.
தைவானில் Gaoshan இன மக்கள் தொகை அதிகரித்து வருகின்றது. 2001ஆம் ஆண்டு வரை, இது 4 லட்சத்து 15 ஆயிரத்தை எட்டியுள்ளது.
தைவான் காவ்ஷன் இன மக்களில் அமிஸ், தயால், பைவான், புனுன், குகாய், சு, புயூமா, சைசியத், சாவோ உள்ளிட்ட பத்து பழங்குடி இன மக்கள் இடம்பெறுகின்றனர்.
1 2