• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[இரு கரை பொருளாதார வர்த்தக தொடர்பு]

தைவான் நீரிணையின் இரு கரைகளுக்கிடையே பொருளாதார வர்த்தக தொடர்பில் தற்போதைய நிலை

1949ஆம் ஆண்டு முதல் 1978ஆம் ஆண்டு வரையான 30 ஆண்டுகளில், தைவான் நீரிணையின் இரு கரைகளுக்குமிடையே பதற்றம் நிறைந்த ராணுவ மோதலின் காரணமாக, பொருளாதார வர்த்தக தொடர்பு இல்லாமல் இருந்தது. அப்போது, தைவானில் மாற்று காண முடியாத அல்லது உற்பத்தி செய்யப்பட முடியாத சில வகையான தேவைகள் மட்டும், சிறு அளவுகளில் சீனப் பெருநிலப்பகுதியிலிருந்து ஹாங்காங் வழியாக, தைவானுக்கு கிடைத்து வந்தது.

1979ஆம் ஆண்டு முதல், இரு கரை பொருளாதார உறவை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் பலவற்றை சீனப் பெருநிலப்பகுதி மேற்கொண்டு, தைவான் பொருட்களுக்கு சலுகைகளை வழங்கியது. சீனப் பெருநிலப்பகுதி மீதான வர்த்தக கொள்கையை தைவான் அதிகார வட்டாரம் சரிப்படுத்தி, இரு கரை வர்த்தக தொடர்பு மீதான கட்டுப்பாடுகளைப் படிப்படியாக தளர்த்தியது. 2003ஆம் ஆண்டின் செப்டம்பர் திங்கள் இறுதி வரை, இரு கரை மொத்த வர்த்தகம், 30 ஆயிரத்து 918 கோடி அமெரிக்க டாலரை எட்டியது. இதில், தைவானுக்கான சீனப் பெருநிலப்பகுதியின் ஏற்றுமதி 4889 கோடி அமெரிக்க டாலராகும். தைவானிலிருந்து பெருநிலப்பகுதிக்கு இறக்குமதி மதிப்பு 26029 கோடி அமெரிக்க டாலராகும். சீனப் பெருநிலப்பகுதி, தைவானுடன் நடத்திய வர்த்தகத்தில் 21140 கோடி அமெரிக்க டாலர் பற்றாக்குறை ஏற்பட்டது. தைவானின் உபரிவர்த்தகத்திற்கு முக்கிய ஆதாரமாக சீனா 1991 முதல் இருந்து வருகிறது. இதனிடையில், தைவான், பெருநிலப்பகுதியின் முக்கிய முதலீட்டு மூலங்களில் ஒன்றாகும் என்று புள்ளி விவரம் காட்டுகின்றது.

இரு கரை வர்த்தக நடவடிக்கையில் தோன்றியுள்ள மூன்று முக்கிய சிறப்புத்தன்மைகள்

முதலாவது, நோடியற்ற வர்த்தகம், தைவான் வணிகர்கள் பெருநிலப்பகுதியில் முதலீடு செய்வது ஆகியவை இரு கரை வர்த்தக நடவடிக்கைகளின் முக்கிய வடிவங்களாகும். தொழில் நிறுவனம் நடத்துதல், அறிவியல் தொழில் நுட்ப தொடர்பு, நிதித்தொடர்பு, பயிற்சி அளித்தல் ஆகியவை இவற்றில் அடங்கும்.

இரண்டாவது, இரு கரை வர்த்தகம், ஒருதரப்பானது; தொடர்ச்சியற்றது; பாரபட்சமானது. தைவான் அதிகார வட்டாரம் விதித்த கட்டுப்பாடுகளால், சீனப் பெருநிலப்பகுதி மற்றும் தைவானுக்கு அப்பாற்பட்ட நகரங்களில் அமைந்துள்ள ஒரு நிறுவனத்தின் மூலம் தைவான் வணிகர்கள் பெருநிலப்பகுதியில் முதலீடு செய்கின்றனர். பெருநிலப்பகுதியில் தைவான் கூட்டு நிறுவனங்கள் நேரடியாக 10 லட்சம் அமெரிக்க டாலருக்கு குறைவாக முதலீடு செய்ய முடியும். ஆனால் மூன்றாவது இடம் வழியாக நிதி பெருநிலப்பகுதியில் நுழைய வேண்டும். இரு கரைகளுக்குமிடையே நேரடி வர்த்தகத்தை தைவான் அதிகார வட்டாரம் நிராகரிப்பதால், மூன்றாவது இடம் மூலம் இரு கரை வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. தைவானில் சீனப்பெருநிலப்பகுதியின் மூலதன வரத்துக்கு தைவான் அதிகார வட்டாரம் தடை விதித்துள்ளது. இது, நியாயமற்ற வர்த்தக உறவுக்கு வழிகோலியுள்ளது. இரு கரை வர்த்தகத்தின் ஏற்றத்தாழ்வுக்கும் இது வழிகாட்டியுள்ளது.

மூன்றாவது, கடந்த சில ஆண்டுகளில், இரு கரை வர்த்தகம் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. ஒன்றிடம் இல்லாததை மற்றது நிறைவு செய்யும் நிலைமை உருவாயிற்று.

1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040