• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[இரு கரை பொருளாதார வர்த்தக தொடர்பு]

தைவான் நீரிணையின் இரு கரைகளுக்குமிடையே மூன்று நேரடி தொடர்புகள்

1979ஆம் ஆண்டில், தைவான் நீரிணையின் இரு கரைகளுக்குமிடையே அஞ்சல், வணிகம், விமான மற்றும் கப்பல் சேவைகளின் நேரடி தொடர்புகள் பற்றிய யோசனைகளை பெருநிலப்பகுதி முன்வைத்தது. கடந்த 20க்கு அதிகமான ஆண்டுகளில், இரு கரைகளுக்குமிடையே "மூன்று நேரடி தொடர்புகளை" விரைவுபடுத்துவதற்கு சீன அரசு சளையாத முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.

தற்போது, "மூன்று நேரடி தொடர்புகளின்" முன்னேற்றம்:

ஒன்று, அஞ்சல் தொடர்பு

அஞ்சல் சேவை

1993ஆம் ஆண்டில், பெருநிலப்பகுதியில் உள்ள தைவான் நீரிணையின் இரு கரை உறவு சங்கமும், தைவானில் உள்ள நீரிணை தொடர்பு நிதியமும், நீரிணைக்கு இடையே பதிவு அஞ்சல்கள் விசாரணை மற்றும் இழப்பீடு உடன்படிக்கையில் கையொப்பமிட்டன. இரு கரைகளுக்குமிடையே பதிவு அஞ்சல் சேவை அதிகாரப்பூர்வமாக துவங்கியது.

தொலைத் தகவல் தொடர்பு சேவை

1996ஆம் ஆண்டில், சீன தொலை தகவல் தொடர்பும் தைவானில் உள்ள Chunghwa தொலை தகவல் தொடர்பும் நேரடி தொலை தகவல் அலுவல் உறவை உருவாக்கின. 1999 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட சீன-அமெரிக்க, ஐரோப்பிய-ஆசிய, ஆசிய-பசிபிக் கடலடி கண்ணாடி இழை கேபிள் மூலம், இரு கரைகளுக்குமிடையே நேரடி தொலைத் தகவல் தொடர்பு வழிகள் உருவாக்கப்பட்டன. இரு கரை தொலைத் தகவல் தொடர்பு துறைகள், தொலைத்தூர தொலைபேசி, தகவல் அனுப்புதல், செல்லிடபேசி வரம்பு, வீடியோபோன் ஆகிய சேவைகளை துவக்கியுள்ளன.

இரண்டு, போக்குவரத்து தொடர்பு

கப்பல் சேவை

1997ஆம் ஆண்டின் ஏப்ரல் திங்களில், பெருநிலப்பகுதியில் உள்ள Fuzhou, Xiamen ஆகிய நகரங்களுக்கும், தைவானின் காவோஸியுங்கிற்குமிடையே நேரடி கப்பல் வெள்ளோட்டம் துவங்கியது. 2001ஆம் ஆண்டின் துவக்கத்தில், Jinmen மற்றும் Mazuயில் வாழ்கின்ற மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு, இந்த இரண்டு தீவுகளுக்கும், புஜியான் மாநிலத்தின் கடலோர பிரதேசங்களுக்குமிடையே கப்பல் சேவைக்கு பெருநிலப்பகுதி உதவி அளித்தது. இரு கரைகளில் முதலீடு செய்யப்பட்டு, பதிவு செய்யப்படும் கப்பல்கள், கூட்டு நிறுவனத்தின் கொடியைப் பறக்கவிடும் முறையில், பயணி போக்குவரத்து சேவையையும் சரக்கு போக்குவரத்து சேவையையும் நடத்தியுள்ளன.

விமான சேவை

1995ஆம் ஆண்டின் டிசம்பர் திங்களிலும் 1996ஆம் ஆண்டின் ஆகஸ்ட் திங்களிலும், மகெள ஐலையனும் ஹாங்காங்கின் Dragon ஐலையனும் மகெள-தைவான் விமானப்பறப்பு வழித்தடத்தையும், ஹாங்காங்-தைவான் வழித்தடத்தையும் தனித்தனியாக திறந்து வைத்தன. பெருநிலப்பகுதியிலிருந்து, மகெள மற்றும் ஹாங்காங் வழியாக தைவானுக்கு செல்லும் மறைமுக விமான தொடர்பு ஏற்பட்டது. 2003ஆம் ஆண்டில், வசந்தகால விழாவைக் கொண்டாடுவதற்கு தைவான் திரும்பிய தைவான் வணிகர்களுக்கு வசதி வழங்கும் பொருட்டு, சீனப் பெருநிலப்பகுதி விட்டுக் கொடுக்கும் மனப்பாங்குடன், உண்மையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அனுமதி அளிக்கப்பட்ட 6 தைவான் விமான நிறுவனங்கள் 16 முறை வாடகை விமான சேவையை நடத்தி, தைய்பே, காவோஸியுங் ஆகிய நகர்களுக்கும் ஷாங்காய் மாநகர்க்குமிடையே ஹாங்காங் மற்றும் மகெள வழியாக, தைவான் வணிகர்களை ஏற்றிச்சென்றன.

மூன்று, வணிகத் தொடர்பு

வர்த்தகம்

1979ஆம் ஆண்டு முதல், சீனப் பெருநிலப்பகுதி தைவான் உற்பத்தி பொருட்களுக்கு சந்தையைத் திறந்து விட்டுள்ளது. வரி குறைப்பு மற்றும் வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகளை வழங்கியுள்ளது. 1978ஆம் ஆண்டில் இரு கரை வர்த்தகம் மட்டும் 4.6 கோடி அமெரிக்க டாலராகும். 2003ஆம் ஆண்டில் 5830 கோடி அமெரிக்க டாலர் வரை அதிகரித்தது. 2002ஆம் ஆண்டின் புள்ளி விவரங்களின் படி, சீனப் பெருநிலப்பகுதி, தைவானின் மிக பெரிய ஏற்றுமதி சந்தையாக மாறியுள்ளது. தைவான், பெருநிலப்பகுதியின் இரண்டாவது பெரிய இறக்குமதி சந்தையாகும்.

முதலீடு

சீனப் பெருநிலப்பகுதியின் தொடர்புடைய வாரியங்களும், பல்வேறு பிரதேசங்களின் அரசுகளும் முதலீட்டுச்சூழலை மேம்படுத்தி, தைவான் உடன்பிறப்புகளுக்கு சிறந்த சேவையை வழங்க பாடுபட்டுள்ளன. இது, தைவான் உடன்பிறப்புகளின் முதலீட்டை விரைவுபடுத்தியுள்ளது. 2003ஆம் ஆண்டின் இறுதி வரை, சுமார் 60 ஆயிரம் தைவான் முதலீட்டுத் திட்டப்பணிகளுக்கு பெருநிலப்பகுதியில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. தைவான் முதலீட்டின் ஒப்பந்த மதிப்பு 6800 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. தைவான் முதலீட்டின் உண்மை பயன்பாட்டுத் தொகை, சுமார் 3600 கோடி அமெரிக்க டாலராகும். 1993ஆம் ஆண்டு முதல், தைவானுக்கு அப்பாற்பட்ட பிரதேசங்களில், பெருநிலப்பகுதி தைவான் வணிகர்கள் முதலீடு செய்வது முதல் விருப்பமாக இருந்து வருகிறது.

நிதித் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பு

இது வரை, 10 தைவான் முதலீட்டு வங்கிகள், பெருநிலப்பகுதியில் உள்ள ஷாங்காய், பெய்ஜிங் முதலிய நகர்களில் தமது பிரதிநிதி அலுவலகத்தை நிறுவியுள்ளன.

எனினும், நீரிணைகருக்கு இடையிலான தொடர்பு இன்னமும் நேரடியாக இல்லை. ஒருவழித் தொடர்பாகவே, ஓரளவுக்கு இருந்து வருகிறது.

அஞ்சல்

இரு கரை அஞ்சல் பார்சல், ஹாங்காங் அல்லது மகெள வழியாக பட்டுவாடா செய்யப்பட வேண்டும். அஞ்சல் சேவை ஒரு வரம்புக்கு உட்பட்டதாகவே இருக்கும். பார்சல் அஞ்சல், சிறு பார்சல் அஞ்சல், பணம் அனுப்புவது, விரைவு பட்டுவாடா இன்னும் தொடங்கப்படவில்லை.

போக்குவரத்து

இரு கரைகளுக்குமிடையே நேரடி கப்பல் மற்றும் விமான தொடர்பு இல்லை. இதனால் மகெள, ஹாங்காங் முதலிய மூன்றாவது இடம் வழியாக பயணிகள் பயணம் செய்ய வேண்டும். இரு கரைகளின் சரக்குகளை நேரடி கப்பல் சேவை மூலம் ஏற்றிச்செல்ல முடியாது. ஹாங்காங், ஜப்பான் உள்ளிட்ட மூன்றாவது இடம் வழியாகத் தான் இவற்றை ஏற்றிச்செல்ல வேண்டும். நீரிணை இடையிலான சரக்கு கப்பல்களில் சரக்குகள் வருவதில்லை. வரும் சரக்குகளையும் சரக்கு கப்பல்கள் ஏற்றி வருவதில்லை.

வர்த்தகம்

சீனப் பெருநிலப்பகுதி சந்தை, தைவான் தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகப் பொருட்களுக்கு முழுமையாக திறந்து விடப்பட்டது. பெருநிலப்பகுதியின் ஏற்றுமதி பொருட்களுக்கு, தைவானில் பல பாரபட்சமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பெருநிலப்பகுதியின் பல வணிகப் பொருட்கள், தைவானில் மிகவும் அதிகமாக விரும்பப்படுகின்றன. ஆனால் அவை தைவானில் நுழைவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பெருநிலப்பகுதி தொழில் நிறுவனங்கள் தைவானில் முதலீடு செய்ய முடியாது. தனது இன்றியமையாத வணிக நிறுவனங்களை தைவானில் நிறுவ முடியாது. பொருளாதார வர்த்தக பொருட்காட்சிகளையும் வர்த்தக பேச்சுவார்த்தைகளையும் பெருநிலப்பகுதி தொழில் நிறுவனங்கள் நடத்துவது கடினம். இவற்றில் கலந்து கொள்வதும் கடினம். தைவானில் பெருநிலப்பகுதி வணிகர்களின் கள ஆய்வு மற்றும் பயணத்துக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040