• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சின்ச்சியாங்கின் பொருளாதாரம்]
சின்ச்சியாங்கின் தொழில் துறை

தற்போது, சின்ச்சியாங்கின் தொழில் துறை விரைவாக வளர்ந்து வருகின்றது. இரும்புருக்கு, நிலக்கரி, எண்ணெய், இயந்திரம், வேதியியல், கட்டிடப் பொருள், நெசவு, சர்க்கரை உற்பத்தி, தாள் உற்பத்தி, தோல் உற்பத்தி, புகையிலை முதலிய பல்வகை தொழில்களைக் கொண்ட தொகுதி சின்ச்சியாங்கில் அமைக்கப்பட்டுள்ளது. பிரதேசத்தின் மூலவளமேம்பாட்டை வெளிப்படுத்துவதன் மூலம், சின்ச்சியாங் தனித்துவம் வாய்ந்த சிறப்பு உற்பத்தி பொருட்களையும் மேம்பாட்டு தொழில்களையும் வளர்ச்சியுறச் செய்துள்ளது. சின்ச்சியாங்கில் பல்வகை தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தொட்டுவிட்டது. இவை, எண்ணெய், நிலக்கரி, உலோகம், மின்சாரம், நெசவு, வேதியியல், இயந்திரம், கட்டிடப் பொருட்கள், உணவு வகை ஆகியவற்றுடன் தொடர்புடைய 2000க்கு அதிகமான பொருட்களை உற்பத்தி செய்கின்றன.

துசான்சி ethane திட்டப்பணி, எண்ணெய் வேதியியல் polyester திட்டப்பணி, உஷ்குவாயே ரசாயன உரத் திட்டப்பணி, மனாஸ் மின் உற்பத்தி ஆலை, சிந்தா சான்கொ நீர் மின்சார நிலையம், குன்யேசி மின் உற்பத்தி ஆலையின் 4வது விரிவாக்கத் திட்டப்பணி ஆகியவை சின்ச்சியாங்கின் முக்கிய தொழில் திட்டப்பணிகளாகும்.

1 2 3 4
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040