• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[தலைசிறந்த மகளிர்கள்]

அரசியல் துறையிலான தலை சிறந்த மகளிர்கள்

சுங் சிங் லிங்

சுங் சிங் லிங் (1893--1981), அரசியலாளர், சமூக சீர்திருத்தவாதி, சீன குடியரசின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஆவார். குவான் துங் மாநிலத்தின் வென் சாங்—இன்றைய ஹாய் நான் மாநிலத்தைச் சேர்ந்தவர். 1913ஆம் ஆண்டில் அமெரிக்காவின் Georgia மாநிலத்திலுள்ள மெக்கன்வெஸ்லி மகளிர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். 1915ஆம் ஆண்டில் சுன்யசன்னுடன் திருமணம் செய்தார். 1925ஆம் ஆண்டில் சுன்யசன் காலமான பின், ரஷியாவுடனும் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் ஒத்துழைத்து, விவசாயிகளுக்கும் தொழிலாளருக்கும் உதவும் கொள்கையில் அவர் தொடர்ந்து உறுதியாக நின்றார். 1927ஆம் ஆண்டிலும் 1929ஆம் ஆண்டிலும் சர்வதேச ஏகாதிபத்திய எதிர்ப்பு கூட்டணி மாநாட்டில் அவர் கௌரவத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, உலக பாசிச எதிர்ப்பு கமிட்டியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக மாறிவிட்டார். 1931ஆம் ஆண்டு நாடு திரும்பிய அவர், சமூக நல லட்சியத்திலும் ஜப்பானிய ஆக்கிரமிப்பில் இருந்து நாட்டை காபாற்றுவதிலும் ஈடுபட்டு வந்தார். ஜப்பானிடம் சரணடைந்து, உள்நாட்டு மக்களை அடக்கி ஒடுக்கிய கோமின்தாங் கட்சி அரசின் கொள்கையை அவர் விமரிசித்தார். 1932ஆம் ஆண்டின் இறுதியில் சீன மக்களின் அதிகாரத்துக்கான காப்புறுதி கூட்டணியை அவர் உருவாக்கினார். ஜனநாயக உரிமைக்காக பாடுபடும் புரட்சிவாதிகளை காபாற்றுவது அதன் நோக்கமாகும். 1933ஆம் ஆண்டில் தூர கிழக்கு ஆசியா ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் போர் எதிர்ப்பு கூட்டணியின் சீன கிளை தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போர் மூண்ட பின், சீன மக்களின் போராட்டத்துக்கு உதவிட, ஹாங்காங்கில் சீனாவை பாதுகாக்கும் கூட்டணியை நிறுவி, மருந்துகளையும் உதவிப் பொருட்களையும் திரட்டினார்.

1945ஆம் ஆண்டு செப்டெம்பர் திங்கள் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போரில் சீனா வெற்றி பெற்ற பின், ஜியாங் ஜெ சிக்கு அமெரிக்க அரசு ஆதரவு அளிக்காமல் தடுக்குமாறு அமெரிக்க மக்களுக்கு சுங் சிங் லிங் வேண்டுகோள் விடுத்தார். நல்வாழ்வு நிதியத்தை அவர் தொடங்கி, மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான நல்வாழ்வு லட்சியத்தில் ஈடுபட்டார். சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பின், அவர் மத்திய அரசின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை அரசு தலைவர், சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் துணை தலைவர், அனைத்து சீன மகளிர் சம்மேளனத்தின் கௌரவத் தலைவர், குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான சீனத் தேசிய கமிட்டி தலைவர் ஆகிய பதவிகளில் அவர் பணி புரிந்தார். 1950ஆம் ஆண்டில் சீன அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் முதலாவது கூட்டத்தில் உலக சமாதான செயற் குழுவின் உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1951ஆம் ஆண்டில் ஸ்டாலின் ஊக்கப் பரிசை அவர் பெற்றார். 1952ஆம் ஆண்டில் ஆசிய-பசிபிக் வட்டார சமாதான தொடர்பு கமிட்டி தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சை சாங்

சை சாங்(1900--1990), ஹு நான் மாநிலத்தின் சியாங் சியாங் மாவட்டத்தைச் சேர்ந்ததவர். 4வது மற்றும் 5வது சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் துணைத் தலைவர். தலைசிறந்த பாட்டாளி வர்க்க புரட்சிவாதி. சீன மகளிர் இயக்கத்தின் முன்னோடி மற்றும் தலைசிறந்த தலைவர். சர்வதேச முன்னேறிய மகளிர் முற்போக்கு இயக்கத்தின் புகழ்பெற்ற தீவிரத் தொண்டர்.

இளம் வயதில் அவர் பிரான்சில் கல்விகாற்றார். 1923ஆம் ஆண்டில் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1934ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் உலகப் புகழ்பெற்ற நீண்ட படையெடுப்பில் கலந்து கொண்டார். 1949ஆம் ஆண்டில் நவ சீனா நிறுவப்பட்ட பின், அனைத்து சீன மகளிர் சம்மேளனத்தின் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது தலைவராகவும் 4வது கௌரவத் தலைவராகவும் அவர் பதவியேற்றார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 8வது, 9வது 10வது மற்றும் 11வது மத்திய கமிட்டியின் உறுப்பினராக இருந்தார். முதலாவது, 2வது மற்றும் 3வது சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டி உறுப்பினர். 4வது மற்றும் 5வது சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் துணைத் தலைவர் பதவிகளையும் வகித்தார்.

தெங் யிங் சாவ்

தெங் யிங் சாவ் (1904--1992), பாட்டாளி வர்க்க புரட்சிவாதி, அரசியல்வாதி, புகழ்பெற்ற சமூக தொண்டர், சீன மகளிர் இயக்கத்தின் முன்னோடி. குவாங் சி சுவாங் இனத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகரான நான்நிங்கில் பிறந்தார். 1919ஆம் ஆண்டில் ஏகாதிபத்தியத்தையும் நிலப்பிரப்புத்துவத்தையும் எதிர்க்கும் மே திங்கள் 4ஆம் நாள் இயக்கத்தில் கலந்து கொண்டார். சோ என்லாய் போன்ற தலைவர்களுடன் இணைந்து தியான் ஜின் மாநகரில் மாணவர்களின் நாட்டுபற்று இயக்கத்தைத் தோற்றுவித்து நடத்தினார். 1925ஆம் ஆண்டில் சோ என்லாயை திருமணம் செய்து கொண்டார். உலக புகழ்பெற்ற நீண்ட படையெடுப்பில் கலந்து கொண்டார். ஆக்கிரமிப்பு எதிர்ப்பு இயக்க மாநாட்டின் சீன கிளையின் கவுசில் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நவ சீனா நிறுவப்பட்ட பின், முதலாவது, 2வது மற்றும் 3வது அனைத்து சீன மகளிர் சம்மேளனத்தின் தலைவராகவும் கட்சி குழுவின் துணைச் செயலாளராகவும் இருந்தார். 4வது அனைத்து சீன மகளிர் சம்மேளனத்தின் கௌரவத் தலைவராகவும், வெளிநாடுகளுடன் நட்புறவுக்கான சீன மக்கள் சங்கத்தின் கௌரவத் தலைவராகவும் அவர் பதவி ஏற்றார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 8வது முதல் 12வது வரையான மத்திய கமிட்டி உறுப்பினராகவும், 11வது மற்றும் 12வது மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினராகவும், மத்திய கமிட்டி கட்டுப்பாட்டு சோதனை கமிட்டியின் 2வது செயலாளராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் மூன்று சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் உறுப்பினராகவும், 4வது மற்றும் 5வது சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் துணைத் தலைவராகவும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் முதலாவது நிரந்தர கமிட்டி உறுப்பினராகவும் 6வது அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஷி லியாங

ஷி லியாங் (1900--1985), ஜியாங் சு மாநிலத்தைச் சேர்ந்தவர். 5வது மற்றும் 6வது சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் துணைத் தலைவர். 5வது சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் துணைத் தலைவர். சீன மத்திய அரசின் முதலாவது சட்ட துறை அமைச்சர். சீன மகளிர் இயக்கத்தின் முன்னோடிகள் மற்றும் தலைவர்களில் ஒருவர். அரசியல் தொண்டர், புகழ்பெற்ற வழக்கறிஞர். 1931ஆம் ஆண்டு முதல் வழக்கறிஞராக பணி புரிந்தார். 1936ஆம் ஆண்டில் ஜப்பானிய ஆக்கிரமிப்பை எதிர்த்து நாட்டை காப்பாற்றும் இயக்கத்தை நடத்தியதால் கோமின்தாங் கட்சியால் கைது செய்யப்பட்டார். நவ சீனா நிறுவப்பட்ட பின், மத்திய மக்கள் அரசு முதலாவது சட்ட துறை அமைச்சராகவும், அரசியல் விவகார மன்றத்தின் அரசியல் மற்றும் சட்ட கமிட்டியின் உறுப்பினராகவும் இருந்தார். முதலாவது முதல் 6வது வரையான சீனத் தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதி, 2வது முதல் 4வது வரையான மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டி உறுப்பினர், 5வது நிரந்தர கமிட்டி உறுப்பினர் மற்றும் சட்ட கமிட்டியின் துணைத் தலைவர். 5வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத் தொடரில் துணை தலைவராகவும் 6வது தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் 4 சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடுகளில் நிரந்தர கமிட்டி உறுப்பினர், 5வது மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் துணைத் தலைவர், ஜனநாயக லீக் முதலாவது மத்திய அரசியல் குழு உறுப்பினர். முதல் 3 ஜனநாயக லீக் மாநாட்டில் துணைத் தலைவர், 4வது மற்றும் 5வது ஜனநாயக லீக் தலைவர். முதல் 4 அனைத்து சீன மகளிர் சம்மேளனங்களின் துணைத் தலைவர் என்ற தலைமை பதவியில் பணி புரிந்தார்.

வூ யி

வூ யி (1938--), சீன மக்கள் குடியரசின் துணைத் தலைமை அமைச்சர். ஹுபெய் மாநிலத்தின் உ ஹான் நகரில் பிறந்தவர். பெய்ஜிங் பெட்ரோலியம் கல்லூரியில் பட்டம் பெற்றார். உயர் நிலை பொறியாளர். 1962ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அதே ஆண்டு ஆகஸ்டு திங்களில் பணி புரியத் துவங்கினார். தொழில் நுட்ப தொழிலாளர், அலுவலகத்தின் செயலாளர் மற்றும் ஆலையின் துணை தலைவராக பணி புரிந்தார். 1983ஆம் ஆண்டு முதல் 1988ஆம் ஆண்டு வரை, பெய்ஜிங் யான்சான் பெட்ரோலியம் மற்றும் வேதியியல் தொழிற்துறை நிறுவனத்தின் துணை மேலாளராகவும் கட்சி கமிட்டி செயலாளராகவும் பதவி ஏற்றார். 1988ஆம் ஆண்டு முதல் 1991ஆம் ஆண்டு வரை, பெய்ஜிங் மாநகராட்சியின் துணை மேயராக பதவி ஏற்றார். 1991ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை, வெளிநாட்டு பொருளாதார வர்த்தக துறையின் துணை அமைச்சராகவும் கட்சி குழுவின் துணை செயலாளராகவும் பதவி ஏற்றார். 1993ஆம் ஆண்டு முதல், வெளிநாட்டு வர்த்தக ஒத்துழைப்பு துறை அமைச்சராகவும் கட்சி குழுவின் செயலாளராகவும் பதவி வகித்தார். 1998ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரை, அரசவை உறுப்பினர். 2003ஆம் ஆண்டு மார்ச் திங்களில் துணைத் தலைமை அமைச்சராக பதவி ஏற்றார். அதே ஆண்டு ஏப்ரல் திங்கள் முதல் நலவாழ்வு துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சி 13வது மத்திய கமிட்டியின் மாற்று உறுப்பினர். 14வது, 15வது மற்றும் 16வது மத்திய கமிட்டியின் உறுப்பினர். 15வது மத்திய கமிட்டி அரசியல் குழுவின் மாற்று உறுப்பினர். 16வது மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினர்.

1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040