• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[தலைசிறந்த மகளிர்கள்]

சீனாவின் புகழ்பெற்ற மூத்த பெண் அறிஞர்

லின் சியாவ் ச்சி

மருத்துவ அறிவியலாளர், புச்சின் மாநிலத்தின் சியாமன் நகரில் பிறந்தார். 1929ஆம் ஆண்டில் பெய்ஜிங் Union மருத்துவக் கல்லூரியில் டாக்டர் பட்டம் பெற்றார். Union மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மகபேறு மற்றும் மகளிர் நோய் பிரிவின் பேராசிரியர் மற்றும் தலைவர். பெய்ஜிங் மற்றும் மகளிர் நோய் மருத்துவமனையின் கௌரவத் தலைவர். சீன மருத்துவ அறிவியல் கழகத்தின் துணைத் தலைவர். முன்பு கருப்பையில் உள்ள கரு சுவாசிப்பது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். ஊட்டச் செல்லில் கட்டி தோன்றி வளர்வது மற்றும் இடுப்புப்பகுதி காச நோய் பற்றிய ஆராய்ச்சி, அறிவியல் பிரச்சாரம் மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான நல வாழ்வு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். அவரின் மருத்துவ நுட்பம் தலைசிறந்தது. 1955ஆம் ஆண்டில் சீன அறிவியல் கழகத்தின் மூத்த அறிஞராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சியெ சி தெ

சியெ சி தெ, இயற்பியலாளர், புச்சின் மாநிலத்தின் சுவான்சோவில் பிறந்தார். 1946ஆம் ஆண்டில் சியாமன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். 1951ஆம் ஆண்டில் அமெரிக்காவின் MIT பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்று, மேற்படிப்புக்காக தொடர்ந்து ஆராய்ச்சி செய்தார். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான், ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசம் ஆகியற்றின் 12 உயர் கல்வி நிலையங்களில் கௌரவ அறிவியல் டாக்டர் பட்டமும், ஜப்பானிய TOYO பல்கலைக்கழகத்தின் கௌரவ பொறியியல் டாக்டர் பட்டமும் பெற்றார். 1988ஆம் ஆண்டில் 3வது உலக அறிவியல் கழகத்தின் மூத்த அறிஞராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க கலை மற்றும் அறிவியல் கழகத்தின் அந்நிய மூத்த அறிஞர். சீனாவின் Fu Dan பல்கலைக்கழகத்தின் பேராசிரியர். அரை மின் கடத்தி இயற்பியல், மேலோட்ட இயற்பியல் பற்றிய கல்வியிலும் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு, பல முக்கிய சாதனைகளை நிகழ்த்தினார். இந்த ஆராய்ச்சிகளில் அவர் முக்கிய தோண்டுகோலாக இருந்து ஏற்பாடு செய்பவர்களில் ஒருவர். 1980ஆம் ஆண்டில் சீன அறிவியல் கழகத்தின் மூத்த அறிஞராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஹெ செ ஹுய்

ஹெ செ ஹுய், ஜியாங் சு மாநிலத்தின் சு சோ நகரில் பிறந்தார். அணு இயல்பியல் அறிஞர். 1936ஆம் ஆண்டில் சிங்ஹுவாய் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். 1940ஆம் ஆண்டில் ஜெர்மன் பெர்லின் உயர் நிலை தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் பொறியியல் டாக்டர் பட்டம் பெற்றார். ஜெர்மன் K. W. I. அணு இயற்பியல் ஆய்வகத்திலும் பிரெஞ்சு பாரிஸ் அணு வேதியியல் ஆய்வுக்கூடத்திலும் வேலை செய்திருக்கிறார். பல ஆராய்ச்சி துறைகளில் அவர் பெரும் பங்காற்றியுள்ளார். 1980ஆம் ஆண்டில் சீன அறிவியல் கழகத்தின் மூத்த அறிஞராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜியாங் லி ஜின்

ஜியாங் லி ஜின், பெய்ஜிங்கில் பின்றார். வேதியியல் அறிஞர். தற்போது, சீன அறிவியல் கழகத்தின் வேதியியல் ஆய்வகத்தின் ஆய்வாளராக வேலை செய்கிறார். 1944ஆம் ஆண்டில் பு ரென் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை பட்டம் பெற்றார். 1946ஆம் ஆண்டில் முதுகலை பட்டம் பெற்றார். 1951ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். அமெரிக்காவின் கன்சஸ் பல்கலைக்கழகத்திலும் MITயிலும் முனைவர் பட்டத்துக்கு பிந்தைய ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டார். 1955ஆம் ஆண்டில் நாடு திரும்பினார். 1978ஆம் ஆண்டுக்குப் பின், ஒளி வேதியியல் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். 1980ஆம் ஆண்டில் சீன அறிவியல் கழகத்தின் மூத்த அறிஞராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

யின் வென் யிங்

யின் வென் யிங், ஹெ பெய் மாநிலத்தில் பிறந்தவர். பூச்சி நிபுணர். 1947ஆம் ஆண்டில் மத்திய பல்கலைக்கழகத்தின் உயிரின துறையில் பட்டம் பெற்றார். சீன அறிவியல் கழகத்தின் ஹாங்காய் பூச்சி ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர். மாசடையும் ஆரம் கட்டத்திலேயே மீனுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் கிருமி பற்றியும் மீனினால் உண்டாகும் நோய்களைத் தடுத்து சிகிச்சை தருவது பற்றியும் யின் வென் யிங் ஆராய்ச்சி நடத்தியுள்ளார். மீன்களின் வகைப்பாடு, பரிமாணம், விலங்கியல், சினை முட்டையின் வளர்ச்சசி, உயிரியல் அமைப்பு, விந்தணு ஒப்பீட்டு ஆய்வு, நுண்ணோக்கி ஆய்வு போன்ற ஆராய்ச்சிகளைச் செய்து, வால்புழுக்களின் 164 அசல் வகைகளையும், 141 புதிய வகைகளையும், 18 புதிய இனங்களையும், 4 புதிய குடும்பங்களையும் பதிவு செய்துள்ளார்.

யின் தமது "சீன பிராணிகள் ஆவணம்: அசலான வால் இனங்கள்" என்ற ஆராய்ச்சிக் கட்டுரையில், புதிய வகைப்பாட்டை நிலைநாட்டியுள்ளார். மண்வள விலங்கியல் பற்றி முறைப்படியான ஆராய்ச்சியைத் தலைமையேற்று நடத்தியுள்ளார். அவருடைய ஆராய்ச்சியின் விளைவாக மண் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுவதால் மண் விலங்குகளின் விதிகளிலும், செயல்பாட்டிலும் மாற்றம் தெரிந்தது. இந்த ஆராய்ச்சி முடிவுகள், சீனாவின் வெப்ப மண்டல மண் விலங்குகள், சீன மண் விலங்கியல் ஆராய்ச்சி கையேடு மற்றும் சீனாவின் மண் விலங்கினங்கள் என்ற கட்டுரைகளில் வெளியாகியுள்ளன.


1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040