• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[மக்கள் தொகை]
மக்கள் தொகை

சீனா உலகில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும். 2002ம் ஆண்டின் இறுதியில் அதன் மக்கள் தொகை 128 கோடியே 45 லட்சத்து 30 ஆயிரமாகும். இது உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியாகும். உலகில் அதிக மக்கள் தொகை நெருக்கமூடைய நாடுகளில் சீனாவுக்கு ஒன்று. ஒரு சதுர கிலோமீட்டருக்கு 135 பேர் மக்கள் தொகைப் பரவல் சரிசமமற்ற நிலையில் உள்ளது. கிழக்குப் பகுதியில் அதிகமாகவும் மேர்குப் பகுதியில் குறைவாகவும் உள்ளது. கிழக்கு டலோரப் பிரதேசத்தில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 200 பேர் உள்ளனர். மேற்குப் பகுதி பீடபூமி பிரதேசத்தில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு சுமார் 10 பேர் மட்டுமே உள்ளனர். தற்போது சீன மக்களின் சராசரி ஆயுள் 71.40 ஆண்டாகும். இதில் ஆடவர் ஆயுள் 69.63 ஆண்டு. மகளிர் ஆயுள் 73.33 ஆண்டு. உலக சராசரி ஆயுளை விட 5 ஆண்டு அதிகம். வளரும் நாடுகளின் பிரதேசங்களில் இருப்பதை விட 7 ஆண்டு அதிகம். ஆனால் வளர்ச்சியடைந்த நாடுகள் பிரதேசங்களை விட 5 ஆண்டு குறைவு.

2002ல் சீன மக்கள் தொகை அதிகரிப்பு விகிதம் குறைந்துள்ளது. ஆண்டு இறுதியில் பெருநிலப் பகுதியின் மொத்த மக்கள் தொகை 128 கோடியே 45 லட்சத்து 30 ஆயிரமாகும். இதில் நகர வாழ் மக்கள் தொகை 50 கோடியே 21 லட்சத்து 20 ஆயிரமாகும். இது மொத்த மக்கள் தொகையில் 39.1 விழுக்காடாகும்.. கிராமப்புற மக்கள் தொகை 78 கோடியே 24 லட்சத்து 10 ஆயிரமாகும். இது மொத்த மக்கள் தொகையில் 60.9 விழுக்காடு வகிக்கினஅறது. முழு நாட்டிலும் 66 கோடியே 11 லட்சத்து 50 ஆயிரம் ஆடவரும் 62 கோடியே 33 லட்சத்து 80 ஆயிரம் மகளிரும் உள்ளனர். இதில் 0-14 வயதுடையோர் 22.4 விழுக்காடு, 15-64 வயதுடையோர் 70.3 விழுக்காடு வகிக்கின்ரனர். 65 வயதுக்கு மேற்பட்டு முதியோர் 7.3 விழுக்காடு வகிக்கின்றனர். மொத்தம் 9 கோடியே 37 லட்சத்து 70 ஆயிரம் முதியோர் உள்ளனர். 2002ல் மொத்தம் ஒரு கோடியே 64 லட்சத்து 70 குழந்தைகள் பிறந்தன. பிறப்பு விகிதம் ஆயிரத்துக்கு 12.86 ஆகும். 82 லட்சத்து 10 ஆயிரம் பேர் மரணமடைந்தனர். இறப்பு விகிதம் ஆயிரத்துக்கு 6.41 ஆகும்.

1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040