• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[மக்கள் தொகை]

குடும்ப நலத்திட்டம்

குடும்ப நலத்திட்டத்தை அடிப்படை தேசியக் கொள்கையாக சீனா நடத்துகின்றது. அரசாங்கத்தின் வழிக்காட்டலும் பொது மக்களின் சுய விருப்பும் ஒன்றிணைக்கப்பட்ட முறையில் கடைப்பிடிக்கப்படுகின்றது. நடுவண் அரசாங்கமும் உள்ளூர் அரசாங்கங்களும் மக்கள் தொகை அதிகரிப்பைக் பட்டுப்படுத்தி மக்களின் கல்வித் தரத்தை உயர்த்தி மக்கள் தொகை உருவாக்கத்தை மேமேபடுத்துவது பற்றிய கொள்கை மற்றும் சட்டங்களையும் ஒட்டுமொத்த மக்கள் தொகை அதிகரிப்புத் திட்டத்தையும் வகுப்பது, அத்துடன் அனைத்து தம்பதிகளுக்கும் மகப்பேற்றுக்கான கருத்தடை முறைகள், தலைசிறந்த மகப்பேறு தலைசிறந்த குழந்தை வளர்ப்பு முதலியவை பற்றிய ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் தொழில்நுட்ப சேவையையும் வழங்குவது ஆகியவற்றில் அரசாங்கத்தின் வழிகாட்டல் வெளிபடுகின்றது. மகப் பேறு வயது அடைந்த தம்பதிகள் அரசாங்கத்தின் தொடர்புடைய கொள்கைகள் சட்டங்களின் வழிகாட்டலில் தமது வயது, உடல் நலம், பணி, குடும்ப பொருளாதார நிலை ஆகியவற்றுக்கிணங்க பொறுப்புணர்வுடனும் திட்டமிட்ட முறையிலும் குழந்தை பெறுவதுடன் உரிய கருத்தடை முறைகளையும் மேற்கொள்வது என்பது பொது மக்களின் சுயவிருப்பமாகும்.

தற்போது சீனாவில் நடைமுறையில் உள்ள குடும்ப நலத் திட்டத்தின் முக்கிய அம்சஹ்கள் வருமாறு:தாமதித்து திருமணம் செய்து குழந்தை பெறுவதற்கு ஆதரவளிப்பது, ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என்பதற்கு ஆதரவளிப்பது, கிராமப்புறங்களில் உண்மையில் இன்னல் வாய்ந்த தம்பதி சில ஆண்டுகளுக்குப் பின் இரண்டாவது குழந்தை பெறலாம். சிறுபான்மைத் தேசிய இனப் பிரதேசங்களில் தத்தம் தேசிய இனங்களின் விருப்பத்துக்கேற்பவும் தத்தம் தேசிய இனங்களின் மக்கள் தொகை, மூல வளம், பொருளாதாரம், பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்களுக்கிணங்கவும் வெவ்வேறான விதி முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. பொதுவாக ஒரு தம்பதி இரண்டு குழந்தை பெறலாம். சில இடங்களில் மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள அனுமதியுண்டு. மக்கள் தொகை மிகவும் குறைவாக உள்ள சிறுபான்கைத் தேசிய இன மக்களைப் பொறுத்தவரை குழந்தைகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுவதில்லை.

  சீனாவில் குடும்ப நலத் திட்டக் கொள்கை நடைமுறைக்கு வந்த பின் தாமதித்து திருமணம் செய்து குழந்தை பெறுவது எனஅபது சமூகப் பழக்கமாக மாறிவருகின்றது. அதே வேளையில் இக்கொள்கையினால் திருமணத்துக்குப் பின் ஏற்படும் மகப்பேறு மற்றும் கடினமான குடும்பச் சுமையிலிருந்து சீன மகளிர் விடுவிக்கப்பட்டுள்ளனர். தாய் மற்றும் குழந்தைகளின் உடல் நலமும் மேம்பட்டு வருகின்றது.


1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040