• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[பொருளாதார அமைப்பு]
சோஷலிச சந்தைப் பொருளாதார அமைப்புமுறை

1949 ஆண்டு முதல் 30 ஆண்டு காலம், திட்டமிட்ட பொருளாதார அமைப்புமுறையை சீன அரசு நடைமுறைப்படுத்தியது. அதாவது, பொருளாதார வளர்ச்சியின் பல்வேறு துறைகளிலான இலக்கு நாட்டின் சிறப்பு வாரியங்களால் வகுக்கப்பட்டது. சீனப் பொருளாதாரம் திட்டத்துடனும் இலக்குடனும் நிதானமாக வளர்வதற்கு இது துணை புரிந்த போதிலும், இத்துறையின் சொந்த ஆற்றலையும் வளர்ச்சி வேகத்தையும் கட்டுபடுத்தியுள்ளது.

1970 ஆண்டுகளின் இறுதியில், திட்டமிட்ட பொருளாதார அமைப்புமுறையில் சீர்திருத்தத்தை சீனா மேற்கொள்ளத் துவங்கியது. 1978ஆம் ஆண்டு, கிராமப்புறத்தில் குடும்ப பொறுப்பு முறை மேற்கொள்ளப்படத் துவங்கியது. 1984ஆம் ஆண்டு, பொருளாதார அமைப்புமுறை சீர்திருத்தம் நகரங்களிலும் நடைமுறைப்படுத்தப்படலாயிற்று. 1992ஆம் ஆண்டு, சோஷலிய சந்தைப் பொருளாதார அமைப்புமுறையைக் கட்டியமைக்கும் சீர்திருத்த திசையை சீனா உறுதிப்படுத்தியது.

2003ஆம் ஆண்டின் அக்டோபர் திங்களில், சோஷலிசச் சந்தை பொருளாதார அமைப்புமுறையை மேம்படுத்தும் இலக்கையும் கடமையை சீனா மேலும் உறுதிப்படுத்தியது. அதாவது, கிராமப்புறத்திலும் நகரங்களிலும், பல்வேறு பிரதேசங்களிலும், பொருளாதாரத்திலும் சமூகத்திலும், மனிதரும் இயற்கையும் முதலியவற்றின் வளர்ச்சியை ஒழுங்கான முறையில் சரிப்படுத்தி, உள்நாட்டு வளர்ச்சியையும் வெளிநாட்டுத் திறப்புக்கான கோரிக்கையையும் ஒருங்கிணைத்து, மூலவள வழங்கலில் சந்தையின் அடிப்படைப் பங்கினை வெளிப்படுத்தி, தொழில் நிறுவனங்களின் உயிராற்றலையும் போட்டியாற்றலையும் வலுப்படுத்தி, நாட்டின் ஒட்டுமொத்த கட்டுப்படுத்தலை முழுமையாக்கி, அரசின் சமூக நிர்வாகத்தையும் பொதுச் சேவை ஆற்றலையும் மேம்படுத்தி, ஓரளவு வசதி படைத்த சமூகத்தை நிறுவுவதற்கு வலுவான அமைப்புமுறை பாதுகாப்பை வழங்க வேண்டும். பொது உடைமை அமைப்புமுறையை முக்கியமாகக் கொண்டு, பல்வேறு உடைமை அமைப்புமுறைகளுடன் கூட்டாக வளரும் அடிப்படைப் பொருளாதார அமைப்புமுறையை மேம்படுத்துவது, பழைய நகர மற்றும் கிராமப்புற பொருளாதார அமைப்புமுறையை படிப்படியாக மாற்றுவதற்குத் துணை புரியும் அமைப்புமுறையைக் கட்டியமைப்பது, பிரதேசப் பொருளாதாரம் ஒழுங்கான முறையில் வளர்வதை முன்னேற்றுவிக்கும் அமைப்புமுறையை உருவாக்குவது, ஒன்றிணைந்த வெளிநாட்டுத் திறப்பு மற்றும் புதுமையான சந்தை அமைப்புமுறையைக் அமைப்பது, ஒட்டுமொத்தக் கட்டுப்பாட்டுத் தொகுதியையும், நிர்வாக மற்றும் பொருளாதாரச் சட்ட அமைப்புமுறையையும் மேம்படுத்துவது, வேலை வாய்ப்பு, வருமானம், சமூக காப்பீடு ஆகியவற்றுடன் தொடர்பான அமைப்புமுறையை சீராக்குவது முதலியவை இதன் முக்கிய கடமையாகும்.

திட்டத்தின் படி, 2010ஆம் ஆண்டுக்குள் ஒப்பீட்டளவில் முழுமையான சோஷலிச சந்தைப் பொருளாதார அமைப்புமுறை சீனாவில் நிறுவப்படும். 2020ஆம் ஆண்டுக்குள், ஒப்பீட்டளவில் பக்குவம் அடைந்த சோஷலிச சந்தைப் பொருளாதார அமைப்புமுறை நிறுவப்படலாம்.

1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040