உடைமை அமைப்புமுறையின் கட்டமைப்பு
சீன அரசியல் அமைப்பு சட்டத்தின் படி, பூர்வாங்க சோஷலிச காலகட்டத்தில், பொது உடைமை அமைப்புமுறையை முக்கியமாகக் கொண்டு, பல்வேறு உடைமை அமைப்புமுறைகளுடன் கூட்டாக வளரும் அடிப்படைப் பொருளாதார அமைப்புமுறையில் ஊன்றி நின்று, உழைப்பின் படி ஊதியத்தை வழங்குவதை முக்கியமாகக் கொண்டு, பல்வேறு வழங்கல் அமைப்புமுறைகளுடன் இடம்பெறும் அமைப்புமுறையில் சீனா ஊன்றி நிற்க வேண்டும். தற்போது, அரசுசார் பொருளாதாரம், குழுமம் கூட்டாண்மைப் பொருளாதாரம், தனியார் பொருளாதாரம், வெளிநாட்டு முதலீட்டுப் பொருளாதாரம் முதலியவை சீனாவின் உடைமைப் பொருளாதாரத்தில் இடம்பெறுகின்றன.
உற்பத்தி மூலவளங்கள் நாட்டுக்குரியவை என்பது அரசுசார் பொருளாதாரமாகும். மக்கள் குழுவுக்கு உரியது என்பது கூட்டாண்மைப் பொருளாதாரமாகும். தனிநபருக்குரியது என்பது தனியார் பொருளாதாரமாகும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள், தொடர்புடைய சட்டம் மற்றும் விதிகளுக்கிணங்க, கூட்டு முதலீடு, ஒத்துழைப்பு, தனி முதலீடு முதலியவற்றின் மூலம் சீனாவில் கூட்டு நிறுவனத்தை இயக்குவது என்பது வெளிநாட்டு முதலீட்டுப் பொருளாதாரமாகும்.
சீன அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி, நாட்டின் சொத்துக்களையும் கூட்டாண்மைச் சொத்துக்களையும் எந்த நிறுவனங்களும் தனியாரும் எந்த வடிவத்திலும் சீர்குலைத்து ஊடுருவக் கூடாது. தனியார் பொருளாதாரம், அரசு சாரா பொருளாதாரம் உள்ளிட்ட பொது உடைமை தவிர்ந்த பொருளாதாரத்தின் சட்டப்பூர்வ உரிமையையும் நலனையும் அரசு பேணிக்காக்கும். குடிமக்களின் சட்டப்பூர்வ சொத்து பாதிக்கப்படக் கூடாது.
1 2