• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[பொருளாதார வாழ்க்கை]
பொது மக்களின் வருமானமும் நுகர்வும்

50 ஆண்டுகளுக்கு முன் இருந்ததுடன் ஒப்பிடும் போது, சீன மக்களின் வாழ்க்கையில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் இருந்ததைக் காட்டிலும், அதிகமாக மேம்பட்டுள்ளது. மக்களின் வருமானம் அதிகரித்து வருகின்றது. தனிநபர் சொத்து தொடர்ந்து அதிகரித்து, வீடு, உந்து வண்டி, கணிணி, பங்குப் பத்திரம், வெளிநாட்டுப் பயணம் ஆகியவற்றில் மக்கள் முதலீடு செய்கின்றனர்.

1979ஆம் ஆண்டுக்குப் பிந்திய 20 ஆண்டுகள், சீனப் பொருளாதாரமும் மக்களின் வருமானமும் மிக வேகமாக அதிகரிக்கும் காலகட்டமாகும். புள்ளிவிவரங்களின் படி, விவசாயிகளின் நபர்வாரி வருமானம் 1978ஆம் ஆண்டிலான 134 யுவானிலிருந்து, 2002ஆம் ஆண்டில் 2476 யுவானாக அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 7.2 விழுக்காடு அதிகரித்துள்ளது. நகர வாழ் மக்களின் நபர்வாரி வருமானம் 343 யுவானிலிருந்து 7703 யுவானாக அதிகரித்து, ஆண்டுக்கு சராசரியாக 6.7 விழுக்காடு அதிகரித்துள்ளது.

2003ஆம் ஆண்டில், மக்களின் வாழ்க்கை தொடர்ந்து மேம்பட்டுள்ளது. முழு ஆண்டில், நகர் வாழ் மக்களின் நபர்வாரி வருமானம் 8472 யுவானாகும். 9 விழுக்காடு அதிகரித்துள்ளது. விவசாயிகளின் நபர்வாரி வருமானம் 2622 யுவானாகும். 4.3 விழுக்காடு அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்களுக்காகச் செலவிடும் தொகை, குடும்பத்தில் செலவிடும் மொத்தத் தொகையில் வகிக்கும் விகிதம், நகரத்தில் 37.1 விழுக்காடாகும். கிராமப்புறத்தில் 45.6 விழுக்காடாகும். 2002ஐ விட 0.6 விழுக்காடு குறைந்துள்ளது. 2003ஆம் ஆண்டின் இறுதியில், முழு நாட்டில் நபர்வாரி உந்து வண்டியின் எண்ணிக்கை 48 இலட்சத்து 90 ஆயிரமாகும். 2002ம் ஆண்டு அதே காலத்தை விட 14 இலட்சத்து 60 ஆயிரம் அதிகரித்தது.

அன்றாடப் பயன்பாட்டு பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களின் பற்றாக்குறை நிலைமை சீனாவில் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. மக்களின் நுகர்வு அமைப்புமுறையிலும் மாபெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் செலவிடும் மொத்த தொகையில், உணவு, ஆடை, அடிப்படைப் பயன்பாட்டுப் பொருட்கள் ஆகிய அடிப்படை வாழ்வை வெளிப்படுத்தும் பொருட்கள் வகிக்கும் விகிதம் பெரும் அளவில் குறைந்துள்ளது. வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வீடு, போக்குவரத்து, செய்தித் தொடர்பு, மருத்துவம், நல வாழ்வுப் பாதுகாப்பு, பொழுது போக்கு, பயணம் முதலியவற்றில் செலவிடும் தொகை விரைவாக அதிகரித்து வருகின்றது. மக்களின் வாழ்க்கைத் தரம் தொடர்ந்து மேம்பட்டு வருகின்றது.

1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040