|
![]() |
சமூக காப்பீடு
முதியோருக்கான காப்புறுதி
கடந்த சில ஆண்டுகளில், முதியோருக்கான அடிப்படை காப்புறுதி அளவு இடைவிடாமல் விரிவாகி வருகின்றது. அரசு சார் தொழில் நிறுவனம், கூட்டமைப்புத் தொழில் நிறுவனம் ஆகியவற்றிலிருந்து இது பல்வகைத் தொழில் நிறுவனங்களுக்கு விரிவாகியுள்ளது. அரசு சாராத தொழில் நிறுவனப் பணியாளர்களின் காப்பீட்டு உரிமையும் பாதுகாக்கப்பட்டுள்ளது. 2002ஆம் ஆண்டின் இறுதி வரை, சீனாவில் 11 கோடியே 12 இலட்சத்து 90 ஆயிரம் பணியாளரும் பணியிலிருந்து ஓய்வு பெற்ற 3 கோடியே 60 இலட்சத்து 80 ஆயிரம் மக்களும் முதியோருக்கான அடிப்படை காப்புறுதியில் சேர்ந்தனர். 2003 இறுதி வரை, இத்தகைய காப்புறுதியில் சேரும் மக்களின் எண்ணிக்கை 15 கோடியே 49 இலட்சம் ஆகும். 2002ஆம் ஆண்டை விட 75 இலட்சத்து 30 ஆயிரம் அதிகரித்துள்ளது.
மருத்துவக் காப்புறுதி
நகரங்களிலும் மாவட்டங்களிலும் உள்ள பல்வகைத் தொழில் நிறுவனங்களும், அரசு வாரியங்களும், சமூக குழுக்களும் அடிப்படை மருத்துவக் காப்புறுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது சீனாவில் மிகப் பரந்தளவில் பயன்படுத்தப்பட்ட சமூக காப்புறுதி முறைமை இதுவாகும். 2002ஆம் ஆண்டில், சீனாவின் மருத்துவம், நல வாழ்வுப் பாதுகாப்பு, நோய் தடுப்பு ஆகிய நல வாழ்வு அமைப்புகளின் எண்ணிக்கை 2 இலட்சத்து 90 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மருத்துவமனைப் படுக்கைகளின் எண்ணிக்கை 32 இலட்சத்து 10 ஆயிரமாகும். நல வாழ்வு தொழில் நுட்ப பணியாளர் எண்ணிக்கை 44 இலட்சத்து 40 ஆயிரமாகும். பெய்ஜிங், ஹாங்காய், தியேன் ச்சின், சுன் ஜிங் முதலிய பெரிய நகரங்களில் உயர் தரமான பல்வகை சிறப்பு மருத்துவமனை அல்லது பொது மருத்துவமனைகள் இருக்கின்றன. பல்வேறு மாநிலங்கள், தன்னாட்சிப் பிரதேசங்கள் ஆகியவற்றின் நடுத்தர நகரங்களில், நவீனமயமாக்க வசதி படைத்த மருத்துவமனைகளும் சிறப்பு மருத்துவமனைகளும் இருக்கின்றன. தற்போது, மாவட்டம், கிராமம், சிற்றூர் ஆகிய 3 நிலை மருத்துவ மற்றும் நல வாழ்வு வலைப்பின்னல் கிராமப்புறத்தில் குறிப்பிட்ட அடிப்படையை இட்டுள்ளது. மாவட்ட நிலை மருத்துவமனையின் எண்ணிக்கை 2000ஐ எட்டியுள்ளது. கிராமப்புற நல வாழ்வுப் பாதுகாப்பு வாரியங்களின் எண்ணிக்கை 48 ஆயிரமாகும்.
2003ஆம் ஆண்டின் இறுதி வரை, சீனாவில் 10 கோடியே 89 இலட்சத்து 50 ஆயிரம் மக்கள் மருத்துவக் காப்புறுதியில் சேர்க்கப்பட்டனர். இவற்றில் பணியாளர் எண்ணிக்கை 7 கோடியே 97 இலட்சத்து 70 ஆயிரமாகும். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பணியாளர் எண்ணிக்கை 2 கோடியே 91 இலட்சத்து 80 ஆயிரமாகும்.
வேலை இழப்புக்கான காப்புறுதி
சீனாவின் மக்கள் தொகை அதிகம். வேலை இழப்பின் நிர்ப்பந்தம் பெரியது. இந்த சிக்கலைத் தணிவிக்கும் பொருட்டு, 1993ஆம் ஆண்டு முதல், உழைப்பு ஆற்றல் சந்தை இயங்குவது தொடர்பான கொள்கையை சீன அரசு நடைமுறைப்படுத்தி, வேலை வாய்ப்பினைப் பெரிதளவில் அதிகரித்து வருகின்றது. கடந்த சில ஆண்டுகளில் தொழில் கட்டமைப்பைச் சரிப்படுத்தியதால் தோன்றிய அரசு சார் தொழில் நிறுவனப் பணியாளர் வேலை வாய்ப்பினை இழக்கும் பிரச்சினையை ஒட்டி, மறு வேலை வாய்ப்புத் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது. 2002ஆம் ஆண்டு இறுதிவரை, முழு நாட்டிலும் பணியில் ஈடுபடும் மக்களின் எண்ணிக்கை 24 கோடியே 78 இலட்சமாகும். 1998ஆம் ஆண்டு முதல், அரசு சார் தொழில் நிறுவனங்களிலிருந்து வேலை இழந்த சுமார் ஒரு கோடியே 80 இலட்சம் பேர் மறு வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர். 2002ஆம் ஆண்டில் பதிவு செய்த வேலை இழப்பு விகிதம் 4 விழுக்காடாகும். 2003ஆம் ஆண்டின் இறுதிவரை, வேலை இழப்பு காப்புறுதியில் சேரும் மக்களின் எண்ணிக்கை 10 கோடியே 37 இலட்சத்து 30 ஆயிரமாகும்.
மிகத் தாழ்ந்த வாழ்வுக்கான காப்பீடு
சீனாவில் நகரங்களிலோ, மாவட்டங்களிலோ மிகவும் தாழ்ந்த வாழ்வுக்கான காப்பீடு அமைப்புமுறை உள்ளது. நகரவாசிகளின் நபர்வாரி வருமானம் உள்ளூர் வரையறை விட குறைவாக இருக்கும் போது, அடிப்படை வாழ்வு காப்பீடு வழங்கப்படும். 2003ஆம் ஆண்டு, சீனாவில் மொத்தம் 2 கோடியே 23 இலட்சத்து 50 ஆயிரம் நகரவாசிகள் அரசு வழங்கிய காப்பீட்டைப் பெற்றுள்ளனர். நகரத்தில் வறிய மக்கள் அனைவரும் இத்தகைய காப்பீட்டில் சேர்க்கப்படுவது என்ற இலக்கு நனவாகியுள்ளது.
|