|
![]() |
ச்சூ சொங்ச்சியும் 丌உம்
丌பராயின் பை என்ற கணிதக் குறியின் மதிப்பைக் கணக்கிடுவது என்பது கணிதவியலில் ஒரு முக்கியமான சிக்கலான ஆராய்ச்சியாகும். சீனாவின் பண்டைக்காலத்தில் பல கணிதவியல் அறிஞர்கள் ்தைக் கணக்கிட ஒரும் பாடுபட்டனர். கி.பி.5வது நூற்றாண்டில் வாழும்த ச்சூ சொங் ச்சி என்பவர் பற்ற சாதனை இதற்கு ஒரு முன்னேற்றப் பாய்ச்சல் என்று கூறலாம். அவர் பண்டைக்கால சீனாவின் மாபெரும் கணித மர்றும் வானியல் அறிஞர் ஆவார். கி.பி. 429ம் ஆண்டில் சியென் காங்(இன்றைய நாங்கிங்கில்)பிறந்த அவரும் அவருடைய குடும்பத்தினரும் தலைமுறை தலைமுறையாக வானியல் மற்றும் பஞ்சாங்கத் தத்துவத்தின் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். சிற வயதிலிருந்தே அவர் கணிதவியல் மற்றும் வானியல் அறிவைக் கற்ற்க் கொள்ள துவங்கினார்.
பண்டைக்காலத்தில் ஒரு வட்டத்தின் சுற்றளவு அதன் வட்டத்தை போல மூன்று மடங்குக்கு அதிகம் என்ற கோட்பாடு இருந்தது. ஆனால் எவ்வளவு அதிகம் என்பது பற்றி கருத்து வேற்றுமைகள் நிலவின. ச்சூ சொங் ச்சிக்கு முன் சீன கணிதவியல் அறிஞர் லியூ வெய்ஒரு வட்டத்திற்குள்ளே உள்ள ஒரே அளவைத் கொண்ட பல பக்கங்களின் நீளத்தைக் கணக்கிடுவதன் மூலம் ஒரு வட்டத்தின் சுற்றளவைக் கணக்கிடும் முறையை முன்வைத்தார். இம்முறை மூலம் கணிக்கிடப்பட்ட 丌யின் விழுக்காடு புள்ளிக்குப் பின் 4 எண்கள் கணக்கிடப்பட்டிருந்தன. ச்சூ சொங் ச்சி முன்னோர் ஆராய்ந்த அடிப்படையில் மீண்டும் மீண்டு கணக்கிடுவதன் மூலம்丌யின் விழுக்காட்டை புள்ளிக்குப் பின் 7 எண்கள் வரை கணக்கிட்டார். அதாவது (3.1415926-3.1415927) என்பதாகும். அவர் எப்படிப்பட்ட முறையில் இந்த விளைவைப் பெற்றார் என்பது பற்றி இது வரை தெரிய வில்லை. லியு வெயின் முறையின் படி அவர் கணக்கிட்டால் ஒரு வட்டத்திற்குள் 16 ஆயிம் பக்க உருக்களின் நீளத்தைக் கணக்கிட வேண்டியிருக்கும். இதற்கு எவ்வளவு காலமும் உழைப்பும் தேவைப்படுமோ?
|