• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[பண்டைகால அறிவியல் அறிஞர்கள்]

சீனாவின் கிழக்கு ஹான் வம்ச ஆட்சிக் காலத்து புகழ் பெற்ற வானியல் அறிஞர் சாங் ஹென்

சாங் ஹென் என்பவர் மத்திய சீனாவின் ஹௌநான் மாநிலத்து நாங் யாங் மாவட்டத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே அவர் படிப்பில் பேரார்வம் காட்டினார். கட்டுரை எழுதுவதில் தேர்ச்சி பெற்ற அவர் 17 வயதான போது தம் பிறந்த ஊரை விட்டு சாங் ஆனுக்குச் சென்றார். சீனாவின் வரலாற்றில் பல வம்சங்களின் தலைநகரான சான் ஆன் நகர் சாங் ஆன் நகர் இபர்போதைய சி ஆன் நகராகும். சாங் ஹென் இந்நகரிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களை ஆராய்ந்தார். மக்களின் பழக்க்கவழக்கங்களையும் சமூக பொருளாதார விலைமையையும் நேரில் கண்டறிந்தார். பிறகு அவர் அக்காலத்து அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் தலைநகரான லொயாங்கில் பன்முறை அதிகாரியாக பதவி ஏற்றார்.

இளம் வயதிலேயே சாங் ஹென் இயற்கை அறிவியல் குறிப்பாக வானியல் மீது பேரார்வம் காட்டினார். பெயரும் புகழும் ஈட்டுவதில் அவருக்கு அக்கறையில்லை. அவர் இரண்டு தடவை பதவி விலகினார். மூன்று ஆண்டுகளில் அவர் தத்துவம், கணிதம், வானியல் ஆகிய துறைகளை ஆராய்ந்து பல அறிவுகளைப் பெற்றுக் கொண்டார். அத்துடன் நூல் எழுதவும் துவங்கினார்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய ஹான் வமிச ஆட்சிக் காலத்தில் புறவெளி அமைப்பு பற்றிய தத்துவங்கள் பல உண்டு. அப்போது மூன்று கல்வி தத்துவங்கள் அதாவது காய்தியென், ஹன் தியென், சியுவான் செ ஆகியவை உண்டு. சாங் ஹென் ஹன் தியென் தத்துவத்திந் பிரதிநிதி. வானம் ஒரு முட்டை போன்றது. நிலம் மஞ்சள் கரு போன்றது. வானம் பெரியது. நிலம் சிறியது. வானமும் நிலமும் தனித்னியாக காற்றுடன் இருந்து நீரில் மிதக்கின்றன. இந்தத் தத்துவம் அப்போது மிகவும் முன்னேறிய தத்துவமாகும். தவிர வானம் மற்றும் நிலத்தின் தோற்றம் மற்றும் பரிணாமம் பற்றி சாங் ஹென் அளித்த பதில் தருக்க முறை சிந்தனை வாய்ந்தது. வானமும் நிலமும் பிரியும் முன் தெள்ளத் தெளிவாக இல்லை. அவை பிரிக்கப்பட்ட பின் லேசானது வானமாகும் கடினமானது நிலமாகவும் மாறின. இவ்விரண்டும் ஒன்றுக் கொன்று பயன் அளித்து உலகில் பல்லாயிரம் பொருட்களைப் படைத்துள்ளன என்று சாங் ஹென் கருத்து தெரிவித்தார். மேலும் அவர் இடைவெளியின் மாற்றத்தைக் கொண்டு கோள்களின் இயக்க வேகத்தை விளக்கினார். கோள்களின் இயக்க வேகம் சூரியனிலிருந்து உள்ள தொலைவுடன் தொடர்புடையது என்று அண்மைக்கால அறிவியல் நிரூபித்திருக்கின்றது. சாங் ஹெனின் விளக்கம் நியாயமான அம்சங்களைக் கொண்டிருப்பதை இதிலிருந்து காணலாம்.

தத்துவ ஆராய்ச்சிக்கு மட்டுமல்ல நடைமுறை வாழ்க்கைக்கும் சாங் ஹென் முக்கியத்துவம் அளித்தார். அவர் தாமாகவே நீர் கொட்டுவதன் மூலம் வானியல் புவி உருண்டை சுழலும் வானத்திற்குரிய பூகோளம் நில நடுக்க மானி ஆகியவற்றை வடிவமைத்தார். இவ்ர வடிவமைத்தது உலகில் நில நடுக்கத்தை அளவிடும் முதலாவது மானியாகும். கி.பி.138ம் ஆண்டு சாங் ஹென் இதைக் கொண்டு ஷாங் சி மாநிலத்தில் நிகழ்ந்த ஒரு நில நடுக்கத்தை வெற்றிகரமாக பதிவு செய்தார். மேலும் இவர் உருவாக்கிய வானியல் புவி உருண்டை தற்போதைய பூகோள வடிவைப் போன்றது. இது மற்றரு அறிவியல் அறிஞரால் உருவாக்கப்பட்டதாகும். இதை சாங் ஹென் சீர்படுத்தினார். அவர் சக்கர அமைப்பை தற்போதைய பூகோள மாதிரியான மானியையும் நேரம் கணக்கிடும் நீர்கொட்டும் குடுவையும் ஒன்றிணைத்தார். இதன் விளைவாக நீர் ஆற்றலில் இந்த பூகோளம் சீராகச் சுழல முடியும் ஒபு நாளைக்கு ஒரு சுற்று சுற்றுகிறது. மக்கள் வீட்டில் இதைக் கண்டு எந்த நேரத்தில் எந்தக் கோள் எங்கே உள்ளது என்பதை கண்டறிய முடியும்.

மேலும் சாங் ஹெங் பல உருப்படியான வானிலை அம்சங்களை ஆராய்ந்து தொகுத்தார். மத்திய சீனப் பிரதேசத்தில் சுமார் 2500 நட்சத்திரங்களைக் காண முடியும் என்று அவர் கணக்கிட்டார். சந்திர கிரகணம் பற்றிய தத்துவத்தை அவர் அடிப்படையில் கிரகித்துக் கொண்டார்.

சாங்ஹென் வானியலாளர் மட்டுமல்ல அவர் ஒரு புகழ் பெற்ற இலக்கிய அறிஞரும் ஆவார். அவர் தீட்டிய ஓவியங்களும் சிறப்பாக உள்ளன. ்க்காலத்திய புகழ் பெற்ற 6 ஓவியர்களில் ஒருவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அறிவியல் தத்துவம் இலக்கியம் ஆகிய துறைகளில் அவர் 32 ஆய்வுக் கட்டுரைகளை விட்டுச் சென்றதாக சீன வரலாற்று நூல்கள் கூறுகின்றன.


1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040