• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனாவின் அரசியல் கட்சிகள்]
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி

சீனக் கமுயூனிஸ்ட் கட்சி சீனத் தொழிலாளர் வர்க்கத்தின் முன்னணிப் படையாகும். அதேவேளையில் சீன மக்கள் மற்றும் சீனத் தேசத்தின் முன்னணிப் படையுமாகும். சீனத் தனிச்சிறபியல்பு மிக்க சோஷலிச லட்சித்துக்குத் தலைமை தாங்கும் மையமுமாகும். சீன முன்னேறிய உழைப்பாற்றலின் வளர்ச்சிக் கோரிக்கையையும் சீன முன்னேறிய பண்பாட்டின் முன்னேற்ற திசையையும் சீனாவின் மிக பல மக்களின் அடிப்படை நலனையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.

கம்யூனிஸத்தை நனவாக்குவது என்பது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மிக உயர்ந்த லட்சியமும் இறுதி குறிக்கோளுமாகும். மார்க்சஸிம் லென்னிநிசம், மாச்சேந்துங் சின்தனை, தென்சியௌபின் தத்துவம் , 3 பிரதிநிதித்துவம் எனும் முக்கிய சிந்தனை ஆகியவை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்களுக்கு வழிக்காட்டும் தத்துவ அடிப்படைகளாகும் என்று கட்சி சாசனம் வகுக்கின்றது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 1921ம் ஆண்டு ஜுலை திங்களில் நிறுவப்பட்டது. 1921ம் ஆண்டு முதல் 1949ம் ஆண்டு வரை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சீன மக்களுக்குத் தலைமை தாங்கி கடினமாக போராடி ஏகாதிப்பத்தியம், நிலபிரப்புத்துவம், அதிகாரப்பூர்வ முதலாளித்தும் ஆகியவற்றின் ஆட்சியை தூக்கியெறிந்து சீன மக்கள் குடியரசை நிறுவியுள்ளது. பின் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நாட்டின் பல்வேறு தேசிய இனங்களின் மக்களுக்குத் தலைமை தாங்கி நாட்டின் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் பேணிகாத்துள்ளது. சீனச் சமூகத்தை புதிய ஜனநாயகச் சமூகத்திலிருந்து சோஷலிச சமூகமாக மாற்றுவதென்ற லட்சியத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி திட்டமிட்ட முறையிலும் பெருமளவிலும் சோஷலிய கட்டுமானத்தை மேற்கொண்டு சீனப் பொருளாதார மற்றும் பண்பாட்டு லட்சியத்தை வலராற்றில் முன்கண்டிராத, மாபெரும் வளர்ச்சியைப் பெறச் செய்துள்ளது.

1956ம் ஆண்டில் உற்த்தி சாதனங்களின் தனியார் உடைமை முறையின் சோஷலிச புனருருவாக்கத்துக்குப் பின் அனுபவம் பற்றாக்குறையாக இருந்ததால், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சோஷலிய கட்டுமானத்துக்குத் தலைமை தாங்கும் போக்கில் தவறு இழைதது. 1966ம் ஆண்டு முதல் 1976ம் ஆண்டு வரையான காலத்தில் "பணாபாட்டு புரட்சி" என்ற கடும் தவறு இழைத்தது.

1976ம் ஆண்டு அக்டோபர் திங்களில் "பணாபாட்டு புரட்சி" முடிவுக்கு வந்தது. சீனா புதிய வரலாற்று வளர்ச்சி காலத்தில் நுழைந்தது. 1978ம் ஆண்டின் இறுதியில் நடைபெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 11வது கமிட்டியின் 3வது முழு அமர்வில் நவ சீனா நிறுவப்பட்டது முதல் ஆழந்த முக்கியத்துவம் வாய்ந்த மாபெரும் திருப்பம் நனவாக்கப்பட்டுள்ளது. 1979ம் ஆண்டு முதல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தென்சியௌபின் முன்மொழிந்த சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்பு கொள்கையை நடைமுறைபடுத்தியுள்ளது. சீர்திருத்த மற்றும் வெளிநாட்டு திறப்பு கொள்கை நடைமுறைக்கு வந்தது முதல் சீனத் தேசிய பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் சாதனைகள் பெறப்பட்டுள்ளன. நாட்டின் தோற்றத்தில் மண்ணையும் விண்ணையும் அதிர்ச்சிசெய்யும் மாற்றங்கள் காணப்பட்டன. அப்போது சீனா நிறுவப்பட்ட பின் காணப்பட்ட சிறந்த நிலைமையுடைய காலமாகும். மக்களும் அப்போது மிக பெரும் நலன் பெற்றுள்ளனர்.

வெளிநாடுகளுடன் உறவை உற்சாகமாக வளர்க்க வேண்டும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகின்றது. சீனாவின் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்பு பணி, நவீனமயமாக்க கட்டுமானம் ஆகியவற்றுக்கென சர்வதேச சூழ்நிலையை உருவாக்க பாடுபட்டு வருகின்றது. சர்வதேச விவகாரங்களில் சுயேச்சையான சமாதான வெளிநாட்டு கொள்கையை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பின்பற்றியுள்ளது. சீனாவின் சுதந்திரத்தையும் ஆட்சியுரிமையையும் பேணிகாத்துள்ளது. மேலாதிக்கவாதத்தையும் வல்லரசு அரசியலையும் எதிர்த்துள்ளது. உலகின் அமைதியை பேணிகாத்து மனித குலத்தின் முன்னேற்றத்தை மேம்படுத்தியுள்ளது. ஆட்சியுரிமை பிரதேச ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு பரஸ்பரம் மதிப்பளித்து, பரஸ்பரம் ஆக்கிரமிக்காமல் இருந்து, மற்றவரின் உள்விவகாரங்களில் தலையிடாமல் சமத்துவம் மற்றும் பரஸ்பரம் நலன் தருவது, சமாதான சகவாழ்வு ஆகிய ஐந்து கோட்பாடுகளின் அடிப்படையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு நாடுகளுடன் உறவை வளர்த்துள்ளது. சுதந்திரம், முழுமையான சமத்துவம், ஒன்றுக்கு ஒன்று மதிப்பளிப்பது, ஒன்று மற்றதன் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது போன்ற 4 கோட்பாடுகளுக்கு இணங்க சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு நாடுகளின் அரசியல் கட்சிகளுடன் நட்பார்ந்த உறவை நிறுவி வளர்த்துள்ளது. தற்போது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உலகில் 120க்கும் அதிகமான நாடுகளின் 300க்கும் மேலான அரசியல் கட்சிகளுடன் நட்பு நிறைந்த தொடர்பை நிலைநிறுத்தியுள்ளது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தன் பணித் திட்டம், சாசனம், ஜனநாய மத்தியத்துவம் கோட்பாடு ஆகியவற்றுக்கு இணங்க நிறுவப்பட்ட ஒருங்கிணைப்பான நிறுவனமாகும், 18 வயதுக்கு வந்த சீனத் தொழிலாளர், விவசாயி, ராணுவத்தினர், அறிவாளர் மற்றும் சமூகத்தைச் சேர்ந்த முன்னேறியவர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பணித் திட்டத்தையும் சாசனத்தையும் ஏற்றுக் கொண்டு கட்சியில் சேர்ந்து உற்சாகத்துதடன் பணி புரிந்து கட்சின் தீர்மானத்தை செயல்படுத்தி திட்டமிட்டவாறு கட்சி கட்டணம் செலுத்த விரும்பினால் அவர்கள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விண்ணப்பம் செய்யலாம் என்று 《சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சாசனத்தில்》வகுக்கப்படுகின்றது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய அமைப்புகளில் கட்சியின் தேசிய மாநாடு, மத்திய கமிட்டி, மத்திய அரசியல் குழு, மத்திய அரசியல் குழுவின் நிரந்தர கமிட்டி, மத்திய செயலகம், மத்திய ராணுவ கமிட்டி, மத்திய கட்டுப்பாட்டு சோதனை ஆணையகம் ஆகியவை இடம் பெறுகின்றன. கட்சியின் தேசிய மாநாடு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்றது. தேசிய மாநாடு நடைபெறாத காலத்தில் மத்திய கமிட்டி சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதியுயர் தலைமை பீடமாகும்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் சுமார் 7 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். நடப்பு பொதுச் செயலாளர் ஷி ச்சின்பீங்.

1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040