• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனாவின் அரசியல் கட்சிகள்]

சீன ஜனநாயக கட்சிகள

சீனாவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தவிர, ஜநநாயக கட்சிகள் என அழைக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகள் உள்ளன. சீனக் கோமின்தான் புரட்சி கமிட்டி, சீன ஜனநாய லீக், சீன ஜனநாயக தேசிய கட்டுமானச் சங்கம், சீன ஜனநாயக முன்னேற்ற சங்கம், சீன விவயாயிகள் தொழிலாளர் ஜனநாயக கட்சி, சிகொங் கட்சி, ஜியூ சான் சங்கம், தைவான் மக்களாட்சி சுயாட்சி லீக் என்பன மேற்கூறிய 8 அரசியல் கட்சிகளாகும். அவற்றில் பெரும்பாலானவை ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போர்க்காலத்திலும் நாட்டின் விடுதலை போர்க்காலத்திலும் படிபடியாக உருவாகி வளர்ச்சியுற்றன. ஜனநாயக கட்சிகள் அரசியல் ரீதியில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்கு ஆமோதிப்பை தெரிவித்துள்ளன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நீண்டகாலமாக ஒத்துழைத்து கூட்டாக போராடும் போக்கில் செய்த வரலாற்று தேர்வு இது. அரசியல் அமைப்பு சட்டம் வகுத்துள்ள வரையறைக்குள் அரசியல் விடுதலையையும் அமைப்பு சுதந்திரத்தையும் சமத்துவ சட்ட தகு நிலையையும் அவை அனுபவிக்கின்றன. நீன்டகாலமாக கூட்டாக வாழ்வது, ஒன்றை ஒன்று கண்காணிப்பு செலுத்துவது, நேர்மையாக கருத்துக்களை தெரிவிப்பது, துன்பத்தையும் கௌரவத்தையும் கூட்டாக ஏற்றுக் கொள்வது என்பது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் பல்வேறு ஜனநாய கட்சிகளும் ஒத்துழைப்பதென்ற அடிப்படை கோட்பாடாகும்.

பல்வேறு ஜனநாய கட்சிகள் ஆட்சிபுரியும் கட்சிகள் அல்ல. எதிர் கட்சிகளும் அல்ல. அவை ஆட்சியில் பங்கு கொண்ட கட்சிகளாகும். தற்போது சீனாவின் பல்வேறு நிலை தேசிய மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டிகள், அரசிய்ல கலந்தாய்வு மாநாட்டின் கமிட்டிகள், அரசாங்க நிறுவனங்கள், பொருளாதாரம், பண்பாடு, கல்வி, அறிவியல் தொழில் நுட்பம் முதலிய நிறுவனங்களில் இக்கட்சிகளின் உறுப்பினர்கள் தலைமை பதவியில் உள்ளனர். எடுத்துக் காட்டாக 8 ஜனநாய கட்சிகளின் மத்தியக் கமிட்டித் நடப்பு தலைவர்கள் தேசிய மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டியின் துணைத் தலைவர்கள் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டியின் துணைத் தலைவர்கள் போன்ற தலைமை பதவிகளில் பணிபுரிகின்றனர். அதேவேளையில் அவற்றின் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் பெரிதும் அதிகரித்துள்ளது. பல்வேறு மாநிலங்கள், தன்னாட்சி பிரதேங்கள், நடுவண் அரசங்கத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழுள்ள மாநகரங்கள், பல்வேறு பெரிய மற்றும் நடுத்தர நகரங்களில் ஜனநாயக கட்சிகளின் பணியகங்கள் உள்ளூர் அமைப்புகளும் அடிமட்ட பிரிவுகளும் உள்ளன.

சீனக் கோமிந்தான் புரட்சி கமிட்டி

சீனக் கோமிந்தான் புரட்சி கமிட்டியின் சுருக்க பெயர் ஜனநாய புரட்சி கமிட்டி என்பதாகும். 1948ம் ஆண்டு ஜனவரி 1ம் நாள் அதிகாரப்பூர்வமாக நிறுவியது. சீனக் கோமிந்தான் கட்சியின் ஜனநாயக குழு, நாட்டுபற்றுடைய ஜனநாயக பிரமுகர்கள் ஆகியோரால் நிறுவப்பட்ட புரட்சி கமிட்டியாகும். அரசியல் ஒன்றியம் என்ற தனிச்சிறப்பியல்பு வாய்ந்தது. சீனத் தனிச்சிறப்பியல்பு மிக்க சோஷலிசத்தின் கட்டுமானத்திலும் தாய்நாட்டின் ஒன்றிணைப்பு லட்சியத்திலும் ஈடுபடும் அரசியல் கட்சியாகும். அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் 50 ஆயிரமாகும். ஹொலுல்லி அம்மையார் மத்திய கமிட்டித் தலைவராக பணிபுரிகின்றார்.

சீன ஜனநாயக லீக்

சீன ஜனநாயக லீக்கின் சுருக்க பெயர் ஜனநாய ஒன்றியம் என்பதாகும். அது 1941ம் ஆண்டு மார்ச் திங்களில் நிறுவப்பட்டது. பண்பாட்டு மற்றும் கல்வித் துறையில் ஈடுபடும் அறிவாளர்களை முக்கியமாகக் கொண்ட சோஷலிய உழைப்பாளர்கள் சோஷலிசத்தை ஆதிரக்கும் நாட்டுபற்றுடையவர்கள் ஆகியோரால் நிறுவப்பட்ட அரசியல் கூட்டணியாகும். சோஷிலிசத்துக்குச் சேவைபுரியும் அரசியல் கட்சியாகும். அதன் உறுப்பினர் எண்ணிக்கை 1 லட்சத்து 56 ஆயிரமாகும். தின் ஷ்சுன் என்பர் மத்தியக் கமிட்டிச் சலைவராக பணிபுரிகின்றார்.

சீன ஜனநாய தேசிய கட்டுமான சங்கம்

சீன ஜனநாய தேசிய கட்டுமான சங்கம் 1945ம் ஆண்டு டிசெம்பர் திங்களில் நிறுவப்பட்டது. நாட்டுபற்றுடைய தேசிய தொழில் மற்றும் வணிக தொழில் முனைவோர் அவர்களுடன் தொடர்பு கொண்ட அறிவாளர்கள் ஆகியோர் இச்சங்கத்தின் முக்கிய உறுப்பினர்களாவர். அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 85 ஆயிரமாகும். சன் ஸ் வெய் மத்தியக் கமிட்டித் தலைவராக பணிபுரிகின்றார்.

சீன ஜனநாயக முன்னேற்ற சங்கம்

சீன ஜனநாயக முன்னேற்ற சங்கம் 1945ம் ஆண்டு டிசெம்பர் திங்களில் நிறுவப்பட்டது. கல்வி, பண்பாடு, வெளியீடு, அறிவியல் ஆகிய துறைகளிலும் மற்ற பணித் துறைகளிலும் பணிபுரிகின்ற உயர் மற்றும் நடுத்தர அறிவாளர்கள் இச்சங்கத்தின் உறுப்பினராக திகழ்கின்றனர். அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 81 ஆயிரமாகும். சியூ சியலு மத்தியக் கமிட்டித் தலைவராக பணிபுரிகின்றார்.,

சீன விவயாயிகள் தொழிலாளர் ஜநநாயக கட்சி

சீன விவயாயிகள் தொழிலாளர் ஜனநாயக கட்சி 1930ம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் நிறுவப்பட்டது. மருத்துவ மற்றும் நலவாழ்வு துறை, அறிவியல் தொழில் நுட்ப மற்றும் பண்பாட்டு கல்வி துறை ஆகியற்றில் பணி புரிகின்ற நடுத்த மற்றும் உயர் நிலை அறிவாளர்களை முக்கியமாக கொண்ட சோஷலிய உழைப்பாளர்களும் சோஷலிசத்தை ஆதரிக்கும் நாட்டுபற்றுடையோரின் அரசியல் கூட்டணியும் ஆகும். அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்துக்கு மேலாகும். சியான் சுன் குவா மத்தியக் கமிட்டித் தலைவராக பணிபுரிகின்றார்.

சிக்கொங் கட்சி

சிக்கொங் கட்சி 1925ம் ஆண்டு அக்டோபர் திங்களில் நிறுவப்பட்டது. கடல் கடந்த சீன மக்கள் அவர்களுடைய குடும்பத்தினர் ஆகியோரை முக்கியமாகக் கொண்ட ஜனநாயக் கட்சி இதுவாகும். அதன் உறுப்பினர் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கு மேலாகும். லோ ஹோசை மத்திய கமிட்டித் தலைவராக பணிபுரிகின்றார்.

ஜுயு சான் சங்கம்

ஜுயு சான் சங்கம் 1946ம் ஆண்டு மே திங்களில் நிறுவப்பட்டது. அறிவியல் தொழில் நுட்பம், பண்பாடு மற்றும் கல்வி, மருத்துவ நலநாழ்வு துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த உயர் மற்றும் நடுத்தர அறிவாளர்கள் அதன் முக்கிய உறுப்பினர்களாக உள்ளனர். அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்துக்கும் அதிகமாகும். ஹொன் சிதெ மத்திய கமிட்டித் தலைவராவார்.

தைவான் ஜனநாய சுயாட்சி லீக்

தைவான் ஜனநாய சுயாட்சி லீக் 1947ம் ஆண்டு நவெம்பர் திங்களில் நிறுவப்பட்டது. சீனப் பெரு நிலப் பகுதியில் வாழ்கின்ற தைவான் மாநிலத்தைச் சேர்ந்தவர்களால் உருவாக்கப்பட்ட, சோஷலிச உழைப்பாளர்கள் சோஷலிசத்துக்கு ஆதரவளிக்கும் நாட்டுபற்றுடையோர் இடம் பெறுகின்ற அரசியல் கூட்டணியாகும். அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 1800க்கு அதிகமாகும். சாங் க் வெய் மத்திய கமிட்டித் தலைவராவார்.


1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040