• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனாவின் பழங்கால சிற்பங்கள்]

மேளம் கொட்டிப் பாடும் சிலைகள்

"மேளத்தை அடித்து பாடும் சிலைகள்" சாம்பல் நிற மண்ணைக் கொண்டு தயாரிக்கப்பட்டவை. அவற்றின் உயரம் 55 சென்டி மீட்டர். கிழக்கு ஹான் வம்சக் காலத்தில் தயாரிக்கப்பட்ட இந்த சிலைகள் சீனாவின் சுச்சுவான் மாநிலத்தின் செங்து நகரின் ஒரு கல்லறையில் இருந்து தோண்டியெடுக்கப்பட்டவை. தற்போது சீன வரலாற்று அருங்காட்சியகத்தில் அவை வைக்கப்பட்டன.

சுச்சுவான் மாநிலத்தில் தோண்டியெடுக்கப்பட்ட பல சிலை மற்றும் சிற்பங்களில், மேளம் கொட்டிப் பாடும் சிலைகள் பிரபலமானவை. இந்த சிலைகள் தரையில் அமர்ந்து, பெரிய தலையில் தலைபாகையை கட்டி, மேலே சட்டை அணியாமல் இடது கை மேளத்தைப் பிடித்திருக்க வலது கை மேளத்தை அடிக்கின்றது. இந்த சிலைகள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பாடுகிறதை காட்டுகின்றன. இது எவ்வளவு ஊக்கமளிக்கும் காட்சியாகும். அவர்கள் என்ன பாடுகிறார்கள் என்பது மக்கள் புரியாத போதிலும் இதைப் பார்த்ததும் மிகவும் ஆனந்தமடைந்து புன்னகை புரிகிறார்கள். இந்த சிலைகளுக்கு முன்னால், சுறுசுறுப்பான நேயர்கள் அவர்களின் சிறந்த அரங்கேற்றதை செவிமடுக்கிறார்கள் என நினைத்திருக்கலாம்.

1 2 3 4 5 6
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040