• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[காவியங்கள்]
கசாக் மன்னர் கதை

"கசார் மன்னரின் வரலாறு"இன்றைக்கு உலகின் ஒரேயொரு வாழும் காவியமாகும். ஏனெனில் இன்றைக்கும் நூற்றூக்கணக்கான நாட்டுப்புறக் கலைஞர்கள் சீனாவின் திபெத், உள்மங்கோலியா, சிங்காய் முதலிய இடங்களில் வீரர் கசார் மன்னரின் அரிய சாதனைகளைப் போற்றிப் பாடி வருகின்றார்கள்.

"கசார் மன்னர் கதை"ஒரு கதையை வர்ணிக்கின்றது. வெகு காலத்துக்கு முன் இயற்கைச் சீற்றமும் ஆட்சியாளரின் அடக்கு முறையும் திபெத் மக்களை ஒடுக்கி வைத்திருந்தன. அப்பாவி மக்கள் அவற்றால் அல்லல்பட்டனர். கருணை தேவதை மக்களை அரக்கற்களின் தொல்லையில் இருந்து காப்பாற்றும் வகையில் சொர்க்கலேக மன்னர் தனது மகன் அமிதாபா புத்தாவை அனுப்பும் படி கேட்டுக் கொண்டார். சொர்க்கலோக மன்னர் தோய்பா காவாவை தமது மகன் அனுப்பினார்.தோய்பாக் காவா திபெத் மக்களின் மன்னராக பிரகடனப்படுத்தினார். அவர் கசார் மன்னர் என்று அழைக்கப்பட்டார். அரக்கனை தோற்கடித்து அப்பாவி மக்களுக்கு மகிழ்வளிக்கும் வகையில் நல்ல குணமும், அபூர்வமான திறமையும் கொண்டவனாக மன்னரை படைப்பாளர்கள் உருவாக்கினர். அவரை தேவன், டிராகன் போன்ற வீரராக வர்ணித்தனர். கசார் மனித குலத்துக்கு வந்தபின் பல முறை மறைமுகமாக தாக்கப்பட்டார். தன் சொந்த ஆற்றல் மற்றும் ஆயாக தெய்வத்தின் பாதுகாப்பினால் உயிரிழக்காமல் மக்களுக்கு எதிரான கெட்டவர்கள் அனைவரையும் கொன்றார். அவர் பிறந்ததில் இருந்து மக்களுக்கு வாழ்க்கை இன்பமாக இருந்தது. 5 வயதில் கசார் தனது தாயுடன் மஞ்சள் ஆற்றின் கரைக்கு குடிபெயர்ந்தார். 12 வயதில் பழங்குடியினர் நடத்திய குதிரை ஏற்ற போட்டியில் அவர் வெற்றி பெற்று மன்னர் பதவி ஏற்றார். அப்போது நண்ணராக மாறிய அவர் சொர்க்க ஆட்சி முறையை வெளிபடுத்தி மனித குலத்தில் இருந்த கெட்ட தேவதைகளை தோற்கடித்தார். வெற்றி பெற்ற பின் அவர் தாய், ராணி ஆகியோருடன் ஆயாக வட்டாரத்துக்கு திரும்பினார். பிரமாண்டமான வரலாற்று காவியங்களான "கசார் மன்னர் கதை"இது பற்றி விபரமாக பதிவு செய்து பாராட்டுகின்றது. இந்த காவயத்தில் 120 அத்தியாயங்கள் உள்ளன. 10 லட்சம் பாடல் வரிகளும் 2 கோடிக்கும் அதிகமான எழுத்துக்களும் இந்த காவியத்தில் உள்ளன. உலகில் மிக நீளமான காவியமாக இது அழைக்கப்படுகின்றது. எண்ணிக்கையைப் பார்த்தால் உலகில் மிக புகழ் பெற்ற வீர காவியங்களான பண்டைகால பாபிலோன் வரலாற்று காவியம் "கிர்க்காமெஷ்" கிரேக்க வரலாற்று வீர காவியங்கள் "இலியாத்", "ஒடிஸி",இந்திய வரலாற்று வீர காவியங்கள்"இராமாயணம்" "மகாபாரதம்" ஆகியவற்றின் மொத்த பாடல்வரிகளின் எண்ணிக்கையை விட "கசார் மன்னர் காவியம்"அதிகம் கொண்டுள்ளது.

"கசார் மன்னர் காவியத்தின்" பல அம்சங்கள் நாட்டுப்புற பாடல்களின் கற்பனைக் கதைகளில் இருந்து பெறப்பட்வை. நூற்றுக்கணக்கான ஆட்களின் தோற்றம் வர்ணிக்கப்படுகின்றனது. வீரர்களோ கெட்டவர்களோ ஆண்களோ பெண்களோ, முதியவர்களோ இளைஞர்களோ அவர்களுக்கு தெளிவான குணம் உண்டு. தோற்றம் தென்படுகின்றது. மொழி தனிச்சிறப்பில் "கசார் மன்னர் காவியம்"பல திபெத் பழ மொழி பயன்படுத்துக்கின்றது. எடுத்துக்காட்டாக வரலாற்று காவியமான "ஹோலின் மலைதொடரில் போர்"என்பதில் பெண்களை வருணிக்கும் போது இவ்வாறு வர்ணிக்கின்றது. அதாவது"அழகான மங்கை ஒருத்தி மலைதொடர்களில் வாழ்கின்றாள். ஓர் அடிமுன்னே எடுத்து வைத்தால் அவளுக்கு நூறு குதிரை மதிப்பு இருக்கும். ஓர் அடி பின்வாங்கினால் அவளுக்கு நூறு ஆடுகளின் மதிப்பு இருக்கும். குளிர்காலத்தில் அவள் சூரிய ஒளியை விட வெப்பமாகவும். கோடை காலத்தில் அவள் நிலா ஒளியை விட குளுமையாகவும் அவள் உடம்பில் மறுமணம் வீசுகின்றது".

மதிப்புக்குரிய பண்பாடு மரபுச் சிதிலம் "கசார் மன்னர் காவியத்தை"சரிப்படுத்துவது, மொழியாக்குவது வெளியீடு செய்வது ஆகியவற்றில் சீன அரசாங்கம் மிக கவனம் செலுத்தியுள்ளது. 2002ம் ஆண்டில் சீனா பெருமளவில் "கசார் மன்னர் காவியம்"உருவாக்கப்பட்ட 1000 ஆண்டு நினைவு நிகழ்ச்தசி நடத்தியது. இது வரை சீனாவின் பத்துக்கும் அதிகமான பல்கலைக்கழகங்களிலும் நிறுவனங்களிலும் பற்பல அறிஞர்கள் இந்த வரலாற்று காவியக்கை ஆராய்ந்து வருகின்றனர்.

1 2 3
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040