• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[காவியங்கள்]

"மானாஸ்"

திபெத் இன வரலாற்று காவியம் "கசார் மன்னர் காவியங்கள்", மங்கோலிய வரலாற்று காவியம் "சியங்கர்"ஆகியவற்றிலிருந்து இது வித்தியாசமானது ஒரு தலைவனைப் பற்றி கூறுவதற்கு பதிலாக குடும்பத்தினர்கள் பற்றி "மானாஸ்"காவியத்தில் கதை கூறுகின்றது.

"மானாஸ்"கிர்கிஸ் இனத்தின் வீர காவியமாகும். கிர்கிஸ் இனம் சீனாவின் சிறுபான்மை தேசிய இனங்களில் நீண்டகால வரலாறுடைய பண்டைகால இனங்களில் ஒன்றாகும். அவர்கள் சீனாவின் வட மேற்கு சிங்கியா உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தில் வாழ்ந்தனர். "மானாஸ"காவியம் 9ம் நூற்றாண்டு முதல் 10ம் நூற்றாண்டு வரை உருவாக்கப்பட்டது. பின் பரவிய போக்கில் கர்கஸ் பாடகர்கள் தலைமுறை தலைமுறையாக பாடி தேசிய இனனத்தின் மாண்பை நிலைநிறுத்தினர் தேசிய இன தனிச்சிறப்பு மிக்க கலை படைப்புகளில் ஒன்றாக இது மாறியது.

மானாஸ் கிர்கிஸ் இன மக்களிடையில் பரவிய புகழ் பெற்ற வீரராகவும் தலைவராகவும் திகழ்ந்தார். சக்தி, துணிச்சல், விவேகம் ஆகியவை நிறைந்த கற்பனை மனிதரானார். வரலாற்று காவியத்தில் மானாஸ் குடும்பத்தில் 8 தலைமுறையினர்கள் கர்கஸ் இன மக்களுக்கு தலைமை தாங்கி அப்பாலிருந்து வந்த ஆட்சியாளர்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நின்றனர். சுதந்திரம், இன்பம் ஆகியவற்றுக்காக போராடிய கதை இதுவாகும். காவியம் எட்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மானாஸ் பெயர் காவியத்தின் தலைப்பாகும் மற்றவை தனித்தனியாக காவியத்தில் இருக்கின்ற மனிதரின் பெயர்களை இட்டு கதை கூறப்படுகின்றது."மானாஸ்", "சைமெத்தையி" "சையித்தைக்", "கைநாமு", "சையிட்", "அஸ்லெபச்சாவும் பிக்ப்பாச்சாவும்", "சுமுப்பிலேக்", "சிக்கதையி"என்பன காவியத்தில் உள்ளடங்கும். பிரிவுகளாகும். காவியத்தில் ஒவ்வொரு பகுதியும் சுதந்திர அத்தியாயமாக உள்ளது. தலைமுறை வீரர்கள் கதை இதில் கூறப்படுகின்றது. இவையனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக உள்ளன. முழுமையான கட்டுமானம் காவியத்துடன் இணைந்துள்ளது. மொத்தமாக 2 லட்சத்து 10 ஆயிரம் வரிசைகளும் இந்த காவியத்தில் உள்ளன. 2 கோடி எழுத்துக்கள்"மனாஸ்"காவியத்தின் தனிச்சிறப்பு. கனாஸ்தர்கள் மற்றும் காட்சிகளின் வர்ணிப்பாகும். காவியத்தில் எஜமானர் மனாஸ் அவருடைய பேரன் பேத்திகள் தவிர, வேறு தனிப்பட்ட குணம் உடைய 100 வீரர்கள் வர்ணிக்கப்படுகின்றனர். மனாஸின் விவேகமிக்க மூதாதையர், மனாஸுக்கு ஆதரவான நெருங்கிய சக போராளி கொடூரமான கர்மாக்ஹை மன்னர், துரோகிகள் அரக்கன் முதலோர் காவியத்தில் ஒருவர் பின் ஒருவராக கதை சொல்கின்றனர். காவியத்தில் பத்துக்கும் அதிகமான போர்கள் வர்ணிகப்படுகின்றது. பல்வகை ஆயுதங்கள் மட்டுமல்ல வீரர்கள் சவால் செய்த குதிரைகளின் தோல் நிறம் 30க்கும் வகையானதாக வர்ணிக்கப்படுகின்றது.

தேசிய இனத்தின் வரலாற்று வீர காவியங்களை படைத்தவர்கள் "மனாஸ் காவியத்தை"ப் பின்பற்றி பல்லாயிரக் கணக்கான படைப்புக்களை உருவாக்கினர். அவர்கள் மனாஸ் வீரர் என அழைக்கப்பட்டனர். முன்பு மனாஸ் வாவியம் எழுத்து மூலப் பதிவு இல்லை. கடந்த ஆயிரம் ஆண்டுகளில் ஜுசோப் மமயி என்பவர் மனாஸ் காவியத்தை முழஉமையாக பாடி முடித்தார்.

85 வயதான ஜுசோப் மமயி வாழும் ஹோமர் என அழைக்கப்படுகின்றார். முழு வாழ்க்கையில் அவர் கண்டு பிடித்து சரிப்படுத்தி, மனாஸை பாடுகின்றார். 1940ம் ஆண்டில் அவர் மக்களுக்காக 7 இரவுகள் தொடர்ச்சியாக மனாஸ் பாட்டி அரங்கேற்றினார். அப்போது முதல் அவருடைய பெயர் பரவிவிட்டது. 1984ம் ஆண்டு முதல் 1995ம் ஆண்டு வரை ஜுசோப் மமயி அடுத்தடுத்து மனாஸ் காவிய முழுவதையும் பாடினார். சீனாவின் மூன்று வரலாற்று காவியங்களையும் முழுமையாக பாடி முடித்தார் அவர் தான்.

தற்போது மனாஸ் சீன மொழியில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டது. காவியத்தில் முக்கிய பகுதிகள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மனி, ஜப்பான் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. 2005ம் ஆண்டு பிபரவரி 17ம் நாள் ஜுசோப் மமயி சிங்கியாங் முதலாவது தியேன் சான் கலை விருது வழங்கப்பட்டார்.

கிர்கிஸ் இனத்தின் நாட்டுப்புற கலையில் தலைசிறந்த பிரதிநிதித்துவ படை என்ற முறையில் "மனாஸ்" கிர்கிஸ் இன மக்களிடேயே ஆழ்ந்த செல்வாக்குடையது. மனாஸ் வீரர் மரணமடைய வில்லை என்று மக்களிடையே கூறப்படுகின்றது. அதேவேளையில் "மனாஸ்" உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கலை வரலாற்றில் அவியாப் பெருமை கொண்டுள்ளது. ஐ.நா 1995ம் ஆண்டு சர்வதேச மனாஸ் ஆபடாக அறிவித்தது.


1 2 3
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040