2008ம் ஆண்டு மே 12ம் நாள், சீன சிச்சுவான் மாநிலத்தின் வென் சுவான் மாவட்டத்தில் ரிக்டர் அளவில் 8 பதிவான நிலநடுக்கம் நிகழ்ந்தது. தற்போது, சீன மக்கள் முழு மூச்சுடன் மீட்புதவிப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் பகுதியில் தொடர்புடைய நிலைமை பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்க நாம் பாடுபடுவோம்.
வினா எழுப்புதல்
செய்தி அறிவிப்பு
• துருக்கி நாட்டு நேயர் மூசா ஓசலின் கேள்வி:
சிச்சுவான் மாநிலம் மற்றும் பிற இடங்களின் பொது மக்கள், நிலநடுக்கத்துக்கு முன் வாங்கிய கடன்களை திருப்பிக் கொடுக்க வேண்டிய நாள் ஒத்துப்போடப்படுமா?

சிச்சுவான் மாநிலம் மற்றும் பிற இடங்களின் பொது மக்கள், நிலநடுக்கத்துக்கு முன் வாங்கிய கடன்களை திருப்பிக் கொடுக்க வேண்டிய நாள் ஒத்துப்போடப்படுமா?
• கொலம்பியாவின் jhon fredy castrillon gil இன் கேள்வி : இந்த நிலநடுக்கத்தில் சிச்சுவானின் ராட்சத பாண்டாகள், காயமடைந்தனவா ?
பதில் : சிச்சுவான் மாநிலத்தின் வனத்தொழில் ஆணையத்தின் கூற்றுகளுக்கு இணங்க, நிலநடுக்கம் நிகழ்ந்த பின், wo long இயற்கை காப்பு மண்டலத்தின் 80க்கு மேற்பட்ட ராட்சத பாண்டாக்களில் மூன்று காணாமல் போயின. கடந்த சில நாட்களில், அவற்றில் ஒன்று கண்டறியப்பட்டது. பணியாளர்கள், மற்ற இரண்டு ராட்சத பாண்டாக்களைத் தேடி வருகின்றனர். இப்போது, wo long இயற்கை காப்பு மண்டலத்தில் பாண்டா இனப்பெருக்க மையத்தின் 53 ராட்சத பாண்டாக்கள் பாதிப்பேதுமின்றி தப்பின.
• ஸ்பெயின் நேயர் Cecilia Tancara கேள்வி: நிலநடுக்கத்தால் அனாதையாக்கப்பட்ட குழைந்தை ஒன்றை நான் தத்து எடுக்க விரும்புகிறேன். நான் சீனாவின் எந்த வாரியத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும்?
பதில்: பல வெளிநாட்டு குடும்பங்கள், நிலநடுக்கத்திலான அனாதையாக்கப்பட்ட குழைந்தைகளை தத்து எடுக்க விண்ணப்பித்தன. பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவர்களது அன்பு மற்றும் ஆதரவுக்கு, சீன பொதுத் துறை அமைச்சகம், நன்றி தெரிவிக்கிறது. தற்போது, அனாதைக் குழந்தைகளை தத்து எடுக்கும் பணி பற்றி இன்னும் பதிவு செய்யத் தொடங்கவில்லை. முதலில் அவர்களது குடும்பத்தினரைத் தேட வேண்டும். கண்டறிய முடியாத நிலையில், அக்குழந்தைகளைச் சட்டத்தின் படி தத்து கொடுக்கத் தொடங்கலாம்.
• இந்திய நேயர் பி.க்ண்ணன்சேகர் கேள்வி :சீனாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் அதிகமான ஏரிப்பகுதிகள் நீர் நிரம்பி வழிவதால் மீட்புப் பணிகள் தாமதம் ஆகிறது என்பது உண்மையா?
பதில்:தொடர்ச்சியான போராட்டத்தின் மூலம், நிலநடுக்க மையப்பகுதியான வென் ச்சுவான் மாவட்டத்துக்குச் செல்லும் பாதையைப் பழுது பார்க்கும் பணியில், முன்னேற்றம் காணப்பட்டுள்ளது என்று சீனப் போக்குவரத்து அமைச்சகம் 15ம் நாள் வெளியிட்ட செய்தி கூறியது.
• பிரேசில் நேயர் Pedro கேள்வி : சீனாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு பணம் மற்றும் பொருளுதவி வழங்குகின்றோம் ?
பதில் : நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிசெய்ய விடும்பினால், நீங்கள், பல்வேறு நாடுகளிலுள்ள சீனத் தூதரகங்களுக்குச் சென்று உதவித்தொகை அளிக்கலாம். மேலும், சர்வதேசச் சீன வானொலி இணையதளத்தின் சீன செஞ்சிலுவை சங்க நிதியம், song qingling நிதியம் ஆகியவற்றின் கூட்டு ஆலோசனைப்படி, உலக நன்கொடை நடவடிக்கைகளில் நீங்கள் கலந்து கொள்ளலாம். அதற்கு இந்த இணைய பக்கங்களில் உலா வாருங்கள்.http://english.cri.cn/tools/online/crcf/index.htmhttp://english.cri.cn/2946/2008/05/15/301@358023.htm
• தமிழ் இணையத்தைப் பயன்படுத்தும் அமுதாராணி: நிலநடுக்கத்தில் இறத்தவர்களின் குடும்பத்தினர்க்கு என்ன நிவரணம் அளிக்க சீனா திர்மணித்து உள்ளது?N.Ramasamy என்பவரின் கேள்வி: சீன செஞ்சிலுவை சக்கம் மூலமாக நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சீன மக்களுக்கு நிதி உத்வி எவ்வளவு கிடைத்து உள்ளது?
பதில்:22ம் நாள், சர்வதேசச் சமூகம், சீனாவின் சி ச்சுவான் மாநிலத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு, உதவித்தொகை மற்றும் நிவாரணப் பொருட்களைத் தொடர்ந்து வழங்கி, நிலநடுக்கப் பேரிடர் நீக்கப் பணி மற்றும் புரனமைப்புப் பணிக்கு, உதவிகளை வழங்கி வருகிறது.
• ஸ்பெயிந் இணையத்தைப் பயன்படுத்தும் HUGO LONGHI என்பவரின் கேள்வி.
தொலைக் காட்சி மூலம் சீந மத்திய தொலைக்காட்சி நிலையத்திந் செய்திகலை ப் பார்த்தேன். நிலநடுக்கப்பிரதேசத்தின் பாதைகள் முழுமையாகச் சீர்குலைக்கப்பட்டுல்ளதாக அறிந்தேன் அப்படியானால், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மீட்புதவிப் பமியாளர்களும் நிவாரணப் பொருட்கலும் எப்படி செந்றடைகின்றனர்? தற்போது அச்சிரமங்கள் சமாளிக்கப்பட்டு விட்டனவா?
• துருக்கி நாட்டு நேயர் மூசா ஓசலின் கேள்வி:
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உளநல சிகிச்சைக்கு, சீன அரசு எத்தகைய நடவடிக்கைகள் மூலம் உதவி செய்யும்?
• வியட்னாம் நேயர் Vuong Hoai Phuong கேள்வி: நிலநடுக்கத்திற்குப் பின், சிச்சுவான் மக்கள் நிதானம் பெறுவதற்கு, சீன அரசு எவ்வாறு உதவி செய்யும்?
பதில்: தற்போது பாதிக்கப்பட்ட மக்களை தற்காலிகமாகக் குடியமர்த்தும் பணி தொடங்கியுள்ளது. 20ம் நாள் நடைபெற்ற அரசவை செய்தி அலுவலகத்தின் செய்தியாளர் கூட்டத்தில் செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்த போது, சீன பொது துறையின் துணை அமைச்சர் jiangli இவ்வாறு கூறினார். பாதிக்கப்பட்ட மக்களின் வசிப்பிடங்களை உருவாக்கும் வகையில், 7 இலட்சம் பெரிய கூடாரங்களையும் 8 இலட்சம் சாதாரண கூடாரங்களையும் பொது துறை அமைச்சகம் அவசரமாக வாங்கியுள்ளது.
• ரஷியர் Aresn Argiligin கேள்வி: வென் ச்சுவான் நிலநடுக்கத்தால் சீனாவுக்கு ஏற்பட்ட நேரடி பொருளாதார இழப்பு எவ்வளவு? தற்போது, சர்வதேசச் சமூகம் சீனாவுக்கு வழங்கிய உதவித்தொகை மற்றும் நிவாரணப் பொருட்களின் மதிப்பு எவ்வளவு?
பதில்: நிலநடுக்கத்தால், சீனாவுக்கு ஏற்பட்ட நேரடி பொருளாதார இழப்புத் தொகை, 13 முதல் 15 ஆயிரம் கோடி யுவானை எட்டியுள்ளது. இந்நிலநடுக்கம், தென்மேற்கு சீனாவின் சி ச்சுவான் மாநிலத்துக்கு மாபெரும் பாதிப்பை ஏற்படுத்திய போதிலும், சீனப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த நிலைமையைப் பாதிக்காது.
More>>