30 ஆண்டுகாலத்தில் பூதுங்கின் வளர்ச்சி
2020-11-15 17:07:40

சீனாவின் ஷாங்காய் மாநகரத்தின் ஹுவாங்பூ ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள ஷாங்காய் கோபுரம், உலகின் 2ஆவது உயரமான கட்டிடமாகும். 132 மாடிகளைக் கொண்ட இக்கட்டிடத்தின் உயரம் 632 மீட்டராகும். இதில், வணிகம், அலுவல், பொருட்காட்சி, விடுதி, உச்சநிலைத் தளச் சுற்றுலா பகுதி ஆகிய மண்டலங்கள் உள்ளன.

இக்கட்டிடத்தில் 106 மின் தூக்கிகள் உள்ளன. உச்சநிலை தளத்திற்குச் செல்ல மட்டும் எட்டு மின் தூக்கிகள் பயன்பாட்டில் உள்ளன. இம்மின்தூக்கிகளை மணிக்கு 64 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.